ஆளுநர், 24-12-2019 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் ச. ஜகதீசனை செயற்குழுவின் தலைவராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், நீதியரசர் ஜகதீசன், 27-12-2019 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். 2010 முதல் வடிவேல் முகுந்தன் என்பவர் இந்தப் பொறுப்பில் இருந்தார். தனக்கு வேண்டிய தகுதியற்ற நபர்களை குழுவில் இணைத்துக் கொண்டு, 2015 வரை பலவித முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
[6/18, 08:27] Sekarreporter 1: தமிழகத்தில், இந்த அமைப்பின் தலைவராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர், செயற்குழு உறுப்பினர்களையும், அதன் தலைவரையும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமனம் செய்கிறார்.
ஆளுநர், 24-12-2019 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் ச. ஜகதீசனை செயற்குழுவின் தலைவராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், நீதியரசர் ஜகதீசன், 27-12-2019 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
2010 முதல் வடிவேல் முகுந்தன் என்பவர் இந்தப் பொறுப்பில் இருந்தார். தனக்கு வேண்டிய தகுதியற்ற நபர்களை குழுவில் இணைத்துக் கொண்டு, 2015 வரை பலவித முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பல்வேறு புகார்களின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு முதல் உபதலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 5 குழு உறுப்பினர்கள் நியமனம் ஆளுநரால் மேற்கொள்ளப்படவில்லை. வடிவேல் முகுந்தன் பணியமர்ந்த போது, சுமார் மூன்று கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக இருந்ததாக, சங்கத்தின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் பதவி ஏற்றுக்கொண்ட செயற்குழுவினர், வங்கிக்கணக்கில் ரூபாய் 1 லட்சம் மட்டுமே இருப்பு உள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
வடிவேல், 27-12-2019 அன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு, நீதியரசர் ஜகதீசனுக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கினார். மேலும், அலுவலகம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும், ஒரு வார காலத்தில் ஒப்படைப்பதாக உறுதி கூறினார்.
ஒரு மாதம் நிறைவுபெற்ற பின்பும், வடிவேல் முகுந்தன் ஆவணங்களை ஒப்படைக்கத் தவறியதால், சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆணையரது அறிவுறுத்தலின் பேரில், வடிவேல் முகுந்தன் 29-01-2020 அன்று அலுவலகம் வந்து, அனைத்து ஆவணங்களையும் 05-01-2020 அன்று ஒப்படைத்து விடுவதாக, உறுதியாகக் கூறினார்.
காவல்துறையின் தொடர் வற்புறுத்தல்களையும் புறக்கணித்துவிட்டு, வடிவேல் முகுந்தன் ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததன் விளைவாக, செயற்குழுவினர் விவாதித்து, பலவித முறைகேடுகள் நடைபெற்று வந்ததை உறுதி செய்தனர். குறிப்பாக, டெல்லி தலைமையகம் மூலமாக வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்களை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்து, வடிவேல் முகுந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி, சான்றிதழ்கள் வழங்காமல், அதற்குரிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு, அந்தத் தொகையை கபளீகரம் செய்து வந்ததைக் கண்டுபிடித்தனர்.
சான்றிதழ் வழங்குவதில் இருந்த ஊழலை மறைப்பதற்காக, தொடர்ந்து தற்காலிக சான்றிதழ்களை, மூன்று மாதம், ஆறு மாதம், அல்லது, ஒரு வருடம் என அறுதியிட்டு வழங்கி, அந்தச் சான்றிதழ்களையே விதிகளுக்கு முரணாக காலநீட்டிப்பு செய்து வழங்கி வந்ததும் தெரிய வந்தது. மேலும் வைப்புநிதி, வாடகை வசூல் மற்றும் இதர வரவுத் தொகைகளைக் கையாடல் செய்து, தனிநபர்கள் லாபம் ஈட்டியதையும் அறிந்தனர். பல வகைகளிலும் முறைகேடாக செயல்பட்டு, சுமார் ரூ.12 கோடி வரை பண மோசடி நடந்திருப்பதை அறிந்து, மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
வடிவேல், சுந்தரி, சிவஞானம் மற்றும் சிலர், கூட்டாக சேர்ந்து கொண்டு, சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு, சங்கத்தின் பண விவகாரங்களில் தில்லுமுல்லு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்திலிருந்து, 117 கிளை சங்கங்களின் மூலமாக வரப்பெற்ற, பல லட்சக்கணக்கான நபர்களின் முதலுதவி தகுதி சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்ட கட்டணத் தொகையினைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு முறையான சான்றிதழ் வழங்காமல், அதற்குரிய தொகையை கையாடல் செய்து, முறையற்ற வழிகளில் வங்கிக்கணக்கில் இருந்து தொடர்ந்து லட்சக்கணக்கான ரூபாயை அபகரித்து உள்ளனர்.
சங்க விதிகளின்படி, கூட்டப்பட வேண்டிய வருடாந்திர பொதுக்குழுவைக் கூட்டி, ஆண்டறிக்கை வரவுசெலவுக் கணக்கு சமர்ப்பித்தல் போன்ற கடமைகளைச் செய்யாமல், பொது மக்களை ஏமாற்றி உள்ளனர். பலவகைகளிலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு, பின்வருமாறு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை முறைகேடாகப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எண் வருடம் தொகை
1 April 2013 to March 2014 76,51,577.00
2 April 2014 to March 2015 1,91,41,873.00
3 April 2015 to March 2016 91,70,749.00
4 April 2016 to March 2017 84,68,000.00
5 April 2017 to March 2018 1,02,13,260.00
6 April 2018 to March 2019 95,24,293.00
Total 6,41,79,752.00
எண் வருடம் தொகை
1 June 2013 2,15,704.00
2 July 2013 43,784.00
3 September 2013 1,13,000.00
4 March 2014 90,739.00
5 June 2014 92,570.00
6 December 2014 1,68,547.00
7 February 2015 3,33,850.00
8 March 2015 2,02,122.00
9 June 2015 1,08,681.00
Total 13,68,997.00
வடிவேல் முகுந்தன், பல தனிப்பட்ட நபர்களுக்கு சங்கத்தின் வருவாயிலிருந்து பணமாகக் கொடுத்தது போக, ஹோட்டல் பில், சொகுசு வாடகை கார் போன்ற முறையற்ற சலுகைகளையும் அள்ளிவிட்டு, தனக்கு வேண்டிய பல சலுகைகளையும் முறைகேடாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.
2013-ஆம் ஆண்டு, கணக்கு தணிக்கையாளாரால், வரவு செலவு கணக்கில் உள்ள பல்வேறு முறைகேடுகளும் சுட்டிக்காட்டப்பட்டு தகவலறிந்த, உறுப்பினர்களின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள முடியாமல், அவர்கள் மீது பொய் வழக்கு ஜோடித்து காவல்துறையில் உள்ள சில நபர்களின் உதவியோடு பல வித முறைகேடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார்
அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர்களையும் தகாத முறையில் நடத்தி, அவமானப்படுத்தி, வடிவேல் முகுந்தன் மற்றும் குழுவினர் விதிகளுக்கு முரணாக பணிநீக்கம் செய்து வந்துள்ளனர். மேலும் ஆளுநர் அவர்களின் அங்கீகாரமின்றி, ஆளுநரால் நியமனம் செய்யப்படாமலேயே, 2015 முதல், வடிவேல் முகுந்தனின் நபர்கள் இம்முறை கேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
வடிவேலின் கூட்டாளிகள், தொடர்ந்து முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஓய்வுபெற்ற காவல் துறையினர் சிலரது ஒத்துழைப்புடனேயே, இச்செயல்கள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரமிக்க நபர்களின் அரவணைப்பில், வடிவேல் முகுந்தன் மற்றும் கூட்டாளிகள், செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கத்தின் நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.