ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்தும் தனி உதவியாளர் மூலமாக அறிக்கை தாக்கல் செய்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நீதிபதி ஆர் சுரேஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்தும் தனி உதவியாளர் மூலமாக அறிக்கை தாக்கல் செய்த சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஆட்சியர் கையெத்திடாமல், அவரது தனி உதவியாளர் அபிசேஷகம் (சென்னை மாவட்ட நில நிர்வாகம்) கையெழுத்திட்டிருந்தார்.

இதை கவனித்த நீதிபதி, மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ள நிலையில், அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் ‘ஆட்சியருக்காக’ என்ற குறிப்புடன் வேறு நபர் கையெழுத்திட்டுள்ள ஆட்சியர் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...

CALL ME
Exit mobile version