அரியலூரில் காவல்துறையினர் தாக்கியதால் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணை குழுவில் குற்றம்சாட்டப்படும் காவல்துறையினர் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூரில் காவல்துறையினர் தாக்கியதால் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணை குழுவில் குற்றம்சாட்டப்படும் காவல்துறையினர் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி, காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டிற்குள் கால்துறையினர் அத்துமீறி நுழைந்து செம்புலிங்கத்தை தாக்கியதால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, அவரது உறவினர் கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிரேத பரிசோதனை நடத்தி அமைதியான முறையில் இறுதி சடங்குகளை நடத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, சந்தேகம் மரணம் என்ற பிரிவில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், உதவி ஆய்வாளர் தான் விசாரணையை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததுடன், செம்புலிங்த்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர் விசாரணை குழுவில் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...

Call Now ButtonCALL ME