வழக்கறிஞர் சூரியமூர்த்தி அளித்த பேட்டி:
வழக்கறிஞர் சூரியமூர்த்தி அளித்த பேட்டி:
கடந்த 11.7.2022 அன்று எடப்பாடி பழனிச்சாமையில் தலைமையில் கூட்டப்பட்ட பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தீர்மானங்களை எதிர்த்து நான் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி என்னை அதிமுகவின் உறுப்பினர் இல்லை என்றும், வேறு கட்சியை சேர்ந்தவர் என்றும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் அதிமுகவில் சூரியமூர்த்தி உறுப்பினர் தான் என்பதை உறுதி செய்து, எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது குறித்தும் மற்ற விவாகரங்களை குறித்தும் அவர் உறுப்பினர் அட்டை வழங்கிய குறித்தும் வழக்கின் பிரதான விசாரணைகள் தெரிய வரும் என்பதை கூறி எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பிரதான வழக்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிமன்றத்தில் நான் கூறியது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் உறுப்பினர் அட்டை விநியோகிக்க தார்மீக உரிமை இல்லை, அவரை பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்தது செல்லாது, கட்சியுடைய நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா விதிகளின்படியே செயல்பட்டார்கள் என்பதை நான் நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக நிரூபித்து இருக்கின்றேன்.நான் கட்சியில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவன் என்பதை நீதிமன்றத்தில் சொல்லியிருந்தேன். எடப்பாடி என்னை தொடர்ந்து உறுப்பினர் இல்லை என்று கூறி வந்தார். இவர் உறுப்பினர் அட்டையை கொடுப்பதற்கு தார்மீக உரிமையில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்திருந்தேன். அதன் அடிப்படையில் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றார்கள், என்றார்.
2022 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தான் நான் வழக்குச் சாக்கு தாக்கல் செய்து இருக்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி கட்சியை ஹைஜாக் செய்திருக்கிறார் என்பதை நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளேன். 1972ல் கட்சியுடைய நிறுவனத் தலைவர் எம் ஜி ஆர் கட்சியில் பொதுக்குழுவிற்கு எல்லா விதிகளையும் திருத்த அதிகாரம் உண்டு, ஆனால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் அந்த விதிகளை மட்டும் நீக்கமோ மாற்றமோ செய்யக்கூடாது என்று போட்டிருந்தார். ஜெயலலிதாவும் அதனை பின்பற்றி இருந்தார். அதற்கு பின்பாக வந்தவர்கள் மாற்றி இருந்தார்கள்.. பொதுக்குழுவிற்கு அதிகாரமே கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது இதனை தெரிவித்திருந்தோம். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது..
2022 பொதுக்குழுவின் தீர்மானங்களை எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை, எந்த ஒரு நீதிமன்றமும் எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச் செயலாளர் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஊடகங்கள் மட்டுமே தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தில் வழக்கு நடக்கின்றது. அதில் கூட எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு எந்த ஒரு கடிதம் கொடுக்கவில்லை. என்னை எப்படி சாதாரண உறுப்பினராக அவர்கள் நடத்துகிறார்களோ அதேபோலதான் அவரையும் நடத்துகின்றார்கள். சமீபத்தில் கூட தேர்தல் ஆணையத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுச்செயலாளர் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை..
பிரதான வழக்கு விசாரணைக்கு வரும்பொழுது, அன்றைய பொதுக்குழு தீர்மானங்கள் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டது, ஜெயலலிதா உடைய கொள்கைகளுக்கு எதிராக கட்சி எந்த வழிகள் எல்லாம் திருடப்பட்டது, பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருக்கின்றதா என்பதை ஆதரப்பூர்வமாக நிரூபிப்போம். கண்டிப்பாக எம்ஜிஆர் காலத்தில் இந்த கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நோக்கத்தில் கட்சியை பயணிக்க வைக்க கோருவேன்.
ஜெயலலிதா மறைந்த பொழுது கட்சி எப்படி இருந்ததோ, அதேபோல இன்றளவும் கட்சி செயல்பட வேண்டும், அதே சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
ஜெயலலிதாவின் மறைவிக்கு பின் எடப்பாடியிடம் உறுப்பினர் கார்டு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, யார் யாரோ உறுப்பினர் கார்டு கொடுத்தால் வாங்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளர் தான் உறுப்பினர் கார்டு வழங்க தகுதி உடையவர் என்பதை என்னுடைய வழக்கில் நிரூபித்து இருக்கின்றேன். அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இனிவரும் காலங்களில் வழக்கு விசாரணை பொருத்துதான் அடுத்த கட்ட நகர்வு குறித்து சொல்ல முடியும்.
இந்த வழக்கு எல்லாவற்றிற்கும் தீர்வானதாக இருக்கும், எடப்பாடி பழனிச்சாமியால் அவரால் நீக்கப்பட்ட அனைவரும் இதனை பயன்படுத்தி நிவாரண பெறுவார்கள்.
இந்த தீர்ப்பை கொண்டு, எடப்பாடி பழனிச்சாமி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக ஒதுக்க தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் நான் மனுத்தாக்கல் செய்ய இருக்கின்றேன்.
மற்ற வழக்குகளுக்கும் இதற்கும் வித்தியாசம், அவர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரட்டை தலைமையை ஏற்றுக் கொண்டு சென்றவர்கள். நான் ஜெயலலிதா தவிர வேறு யார் கையிலும் உறுப்பினர் அட்டை வாங்கவில்லை, இவர்கள் தலைமையை நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை, என்றார்.