மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை – ஐகோர்ட்டில், அரசு தகவல் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை – ஐகோர்ட்டில், அரசு தகவல்
[6/19, 13:59] Sekarreporter 1: செய்திகள்
மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை – ஐகோர்ட்டில், அரசு தகவல்
மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை – ஐகோர்ட்டில், அரசு தகவல்
மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஜூன் 19, 01:15 AM
சென்னை,
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ராஜசேகர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கஜா புயல் போன்ற முந்தைய கால தேசிய பேரிடர்களின் போது நுகர்வோர்களின் கஷ்டங்களை அறிந்து மின் கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான பலமுறை தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்களிடமிருந்து மின் கட்டணம் வசூல் செய்ய தடை விதித்தால், அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்தும்‘ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர, பிற அனைத்து மாவட்டங்களுக்கும் (கடந்த) 15-ந்தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை’ என்று கூறினார்.
இதையடுத்து விசாரணையை
வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று மின் கட்டணம் செலுத்த கால அவாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா?, இல்லையா? என்பதை தெரிவிக்கும்படி கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.