பரமக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை முறைபடுத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த கல்வியாண்டில் படிப்புகளுக்கான நிபந்தனைகளை கல்லூரி பூர்த்தி செய்யாவிட்டால், மாணவர்களை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது

[05/01, 15:24] Mukesh Reporter: பரமக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கையை முறைபடுத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த கல்வியாண்டில் படிப்புகளுக்கான நிபந்தனைகளை கல்லூரி பூர்த்தி செய்யாவிட்டால், மாணவர்களை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமாக்குடியில் உள்ள கணபதி செட்டியார் பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரியின் முதல்வரான முனைவர் டி. பராசக்தி தாக்கல் செய்துள்ள வழக்கில், தங்கள் கல்லூரியில் ஆய்வு கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரியில் அடிப்படை தேவைகளும், பேராசிரியர்களும் போதிய அளவில் இல்லை என கூறி ஏழு பி.இ. படிப்புகளையும், எம்.பி.ஏ. படிப்பையும் 2025-26 ஆம் ஆண்டுக்கு நிறுத்திவைத்து கடந்த ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஒரு உத்தரவும், அந்த 7 பி.இ. படிப்புகளுக்கான அங்கீகாரம் அளிக்க மறுத்து செப்டம்பர் 3 ஆம் தேதியும் மற்றொரு உத்தரவு பிறப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். எம்.பி.ஏ. படிப்புக்கு தேவையான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த நிலையிலும் அதன் அங்கீகாரத்தையும் ரத்து செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே. செல்வராஜ், அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் வழக்கறிஞர் யு.பரணிதரன், தொழிநுட்ப கல்வி இயக்ககம் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆர். கோகுலகிருஷ்ணன், ஏ.ஐ.சி.டி.ஈ. தரப்பில் வழக்கறிஞர் வழக்கறிஞர் பி. ரபு மனோகர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. செல்வராஜ், எம்.பி.ஏ. படிப்புக்கான வசதிகளில் எவ்வித குறைபாடும் இல்லாத நிலையில், அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் யாரும் சேராததால், நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து இடங்களும் ஒதுக்கப்பட்டு, மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில், நடப்பு ஆண்டிற்கான இணைப்பு வழங்குவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 14ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது என்ற காரணத்திற்காக இணைப்பு வழங்க மறுக்க முடியாது என வாதிட்டார். பி.இ. படிப்புக்கான நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த 2025-26 ஆம் ஆண்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.பரணிதரன், எம்.பி.ஏ. படிப்புக்கான வசதிகளில் இருந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்டபோதிலும், உச்ச நீதிமன்றத்தால் மாணவர் சேர்க்கைக்காக நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பிறகே செய்யப்பட்டது என்று விளக்கம் அளித்தார். பி.இ. படிப்புகளை பொறுத்தவரை அடுத்த கல்வி ஆண்டிற்கான இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கான காலக்கெடு ஏற்கனவே தொடங்கிவிட்டதால், இனி நடத்தப்படும் ஆய்வின்போது, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், எகிர்வரும் 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கு தான் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

2025-2026ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கட்டாயமாக வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், அவற்றில் தற்போதும் காலி இடங்கள் உள்ளதால், மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால், அவர்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களை வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி பரத சக்கரவரத்தி பிறப்பித்த உத்தரவில், இதுபோன்ற சூழலில் காலக்கெடுவை நீடிக்கலாம் என ஏற்கனவே இந்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், எம்பிஏ படிப்புக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனுமதிக்கும்படி அண்ணா பல்கலைகழத்துக்கு உத்தரவிட்டார். அதேசமயம் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முடிவடைந்த பிறகே நிர்வாக இடங்களை நிரப்ப வேண்டுமென கல்லூரி நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டார்.

பிஇ படிப்புகளைப் பொறுத்தவரை, பல்கலைக்கழகம் கூடிய விரைவில் ஆய்வை நடத்தும்படியும், நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் 2026-2027ஆம் கல்வியாண்டுகக்கான இணைப்பு அங்கீகாரத்தை வழங்கும்படி உத்தரவிட்டார்.

2025-26 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கு தற்காலிக இணைப்பு அங்கீகாரம் வழங்கி, அவர்களின் சேர்க்கையை முறைப்படுத்தி, படிப்பைத் தொடர அனுமதிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆய்வின்போது மீண்டும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாணவர்களும் மற்ற கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் நீதிபதி தெளிவுடுத்தி உள்ளார்.

மாணவர்களின் சேர்க்கையை முறைப்படுத்த உத்தரவிட்டுள்ளதால், உடனடியாக தேர்வுகள் வரவிருந்தால், அவற்றில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
[05/01, 15:24] Sekarreporter: 🙏

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version