தந்தை, மகனுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு: தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு judge pugalenthi

தந்தை, மகனுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு: தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞரின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் கைதான தந்தை, மகனுக்காக நாகர்கோவில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பது குறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் விஜய் சாரதி. வழக்கறிஞர் ஒருவரின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் தந்தை, மகன் இருவரையும் தெற்கு தாமரைகுளம் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இருவரும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், ”எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் வழக்கறிஞர். அவர் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க உறுப்பினராக உள்ளார். இதனால் எங்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யாமல் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவு:

”மனுதாரர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நபர், மருத்துவமனை சென்றதாகவோ, சிகிச்சை பெற்றதாகவோ ஆதாரம் இல்லை. மனுதாரர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நபர் இருக்கும்போது அவர் சகோதரர் ஏன் புகார் அளித்தார் எனத் தெரியவில்லை. அதேபோல் தனிப்பட்ட பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர் ஜாமீன் பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என எப்படி வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்பது தெரியவில்லை.

இதனால் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கிறது. இவர்கள் இருவரும், தெற்கு தாமரைகுளம் காவல் ஆய்வாளரும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு அக்.25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது”.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

பின்னர் விசாரணை அக்.1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

ஓட்டம், நடை, சிட்டிங் இதுதான் ஆர்சிபி; தொடர்ந்து 7-வது தோல்வி: ஈஸி சேஸிங்;…

அதிமுகவே முன்னாள் திமுகதானே?

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

நல்லதே நடக்கும்

யதார்த்தா ராஜன் எனும் மாற்றுத் திரைப்படப் பேராசான்!

பிரான்சிஸ் கிருபா நினைவேந்தல் நிகழ்வுகள்

வாழக் கற்றுத்தரும் அனுபவங்கள்
இந்திய – அமெரிக்க உறவு பல்வேறு சர்வதேச பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவும்:…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் செப்.26.ல் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்
முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் பரிந்துரைக்கப்படவில்லை; மக்கள் ஏமாற…
புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா தொடக்கம்; சிறந்த திரைப்பட விருதை பெற்றது தேன்
வாணியம்பாடி மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கு: 7 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
மேலும

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME