Supremecourt Advt Gs Mani: செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ. பலனியாண்டி மீது FIR பதிவு செய்து குவாரி லீஸ் ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு பாஜக வழக்கறிஞர்கள் ஜிஎஸ் மணி மற்றும் ஏற்காடு A. மோகன்தாஸ்கோரிக்கை மனு:

[05/02, 14:10] Supremecourt Advt Gs Mani: செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ. பலனியாண்டி மீது FIR பதிவு செய்து குவாரி லீஸ் ரத்து செய்யக் கோரி
தமிழ்நாடு அரசுக்கு பாஜக வழக்கறிஞர்கள் ஜிஎஸ் மணி மற்றும் ஏற்காடு A. மோகன்தாஸ்கோரிக்கை மனு:

சென்னை:
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரி செயல்பாடுகளை செய்தி வெளியிட சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் கதிரவன் மற்றும் கேமராமேன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி, கொலை முயற்சி மேற்கொண்டதாக குற்றச்சாட்டு உள்ள DMK எம்.எல்.ஏ. பலனியாண்டி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர்கள் GS மணி (உச்சநீதிமன்ற வழக்கறிஞர்) மற்றும் ஏற்காடு A. மோகன்தாஸ் தமிழ்நாடு அரசுக்கு சட்டப்பூர்வ பிரதிநிதித்துவ கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் கிராமத்தில் உள்ள கல் குவாரியில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்க பணிகளை செய்தி படமாக்க சென்ற தமிழ் செய்தி சேனல் செய்தியாளர், கதிரவன் கேமராமேன், சமூக செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் குழுவினர், குவாரி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர்.

இரும்புக் கம்பிகள், மரக்கட்டைகள் கொண்டு தாக்கப்பட்டதால் அவர்கள் கடுமையாக காயமடைந்ததாகவும்,
ட்ரோன் கேமரா, செய்தி கேமரா, மைக், மொபைல் போன்கள் உள்ளிட்ட ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல், சட்டவிரோத அடைப்பு
மேலும், செய்தியாளர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாகவும், வெளியே தொடர்பு கொள்ள முடியாத வகையில் கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

போலீஸ் நடவடிக்கையில் சந்தேகம்
இவ்வளவு கடுமையான சம்பவங்கள் நடந்தும்,
IPC 307 (கொலை முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளில் FIR பதிவு செய்யப்படவில்லை,
சில CSR பதிவுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,
போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

குவாரி லீஸ் ரத்து செய்ய கோரிக்கை
இந்த தாக்குதல், சட்டவிரோத சுரங்க பணிகளை மறைக்க அரசியல் பலம் பயன்படுத்தப்பட்டதற்கான சாட்சி என கூறியுள்ள பாஜக வழக்கறிஞர்கள்,
குவாரி லீஸ் விதிமீறல்கள்
சுற்றுச்சூழல் அனுமதி மீறல்
அனுமதியை மீறி வெடிப்பு மற்றும் அகழ்வு
அரசு வருவாய் இழப்பு
ஆகியவற்றை விசாரிக்க சுரங்கத் துறை, சுற்றுச்சூழல் துறை மூலம் முழுமையான ஆய்வு நடத்தி,
குவாரி உரிமம்/லீஸ் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல்
“சட்டவிரோத செயல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காக செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஊடக சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நேரடியான அச்சுறுத்தல்.

ஒரு எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டு இருப்பதால் சட்டம் செயலிழக்க முடியாது” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே DMK எம்.எல்.ஏ. பலனியாண்டி உள்ளிட்டோர் மீது FIR பதிவு செய்து
SIT எனப்படும் சிறப்பு புலனாய்வு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஐஏஎஸ் ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு அமைத்து நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட
போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும்
சட்டவிரோத குவாரி மீது லீஸ் ரத்து & இயந்திரங்கள் பறிமுதல்
பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு & இழப்பீடு ஆகியவைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கப்போகின்றன என்பது குறித்து பொது மக்கள் மற்றும் ஊடக உலகம் உற்றுநோக்கி வருகிறது.

மனு மீது அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாஜக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடி தகுந்த நிவாரணம் பெற இருப்பதாகவும் அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[05/02, 14:45] Sekarreporter: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version