Ops case cvkj

அதிமுகவை பலம் வாய்ந்த சக்தியாக மாற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒண்றிணைவதை தவிர வேறு வழியே இல்லை என ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன் தான்.நானும் செங்கோட்டையனும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார். அதிமுக ஒன்றினைய வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர்கள் எங்களோடு பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.

எம்ஜிஆர், வகுத்த கட்சி விதிகளின் படி அதிமுகவின் பொதுசெயலாளரை கட்சியின் உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என அடிப்படை உறுப்பினர்களுக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த உரிமை தற்போது பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் உரிமையை மீட்கும் குழுவாக தான் நாங்கள் செயல்பட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். மீண்டும் பலம் வாய்ந்த அமைப்பாக அதிமுகவை மாற்ற வேண்டும் என்றால் அதிமுகவை ஒன்றிணைப்பதை தவிர வேறு வழியேயில்லை எனவும் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version