Mukesk high court reporter writer/ அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை எல்.இ.டி. திரையில் காண ஒன்றுகூடியதை சட்டவிரோத கூட்டம் என தமிழ்நாடு காவல்துறை பதிவுசெய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mukesk high court reporter writer/
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை எல்.இ.டி. திரையில் காண ஒன்றுகூடியதை சட்டவிரோத கூட்டம் என தமிழ்நாடு காவல்துறை பதிவுசெய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவின்போது, கோவை காமராஜபுரம் ராமர் கோவில் பஜனை மடத்தின் முன்புறம் எல்.இ.டி. திரை அமைத்து விழா நிகழ்வுகள் திரையிடப்பட்டன. இதன்மூலம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக ஏ.நாகராஜன் என்பவர் அளித்த புகாரில் சுரேஷ் பாபு, கணேஷ் பாபு, நாகராஜ், கோபி, செந்தில்குமார் ஆகியோர் மீது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சுரேஷ்பபஉ உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கோவிலுக்கு முன்புறம் மட்டுமே திரை அமைக்கபட்டதாகவும், பொய்யான குற்றச்சாட்டுகளுடன் அளிக்கபட்ட் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி, தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர். இதுபோன்ற வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோதமாக ஒன்றுகூடினர், கலவரத்தை தூண்டினர் என புகாரில் குறிப்பிடாத நிலையில், சட்டவிரோத ஒன்று கூடல் என்ற சட்டப்பிரிவில் வராது என சுட்டிக்காட்டியுள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதால் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வர போதுமானது என குறிப்பிட்ட நீதிபதி, சந்தேகத்திற்குரிய காரணங்களுக்காகவோ அல்லது ஆதாரம் இல்லாமல் வழக்குத் தொடருவது சட்ட நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமம் என்றும் உத்தரவில் கூறியுள்ளார்.
சில மத நிகழ்வுகள் நடத்தப்படும் போதெல்லாம், பிற குழுக்களிடமிருந்து சில குற்றச்சாட்டுகள் இருக்கத்தான் செய்யும் என தெரிவித்துள்ள நீதிபதி, அப்படி தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக வழக்குத் தொடர முடியாது என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில், சுரேஷ்பாபு உள்ளிட்ட ஐவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Madras High Court Justice N.Sathish Kumar
Crl.O.P.No.27515 of 2025
For Petitioners : Ms.B.Sruthi
for Ms.A.Jagadeeswari
For Respondent : Mr.R.Vinothraja
Government Advocate (Criminal Side)