Msrj bench போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஏன் ஒரு நபர் ஆணையம் அமைக்கக் கூடாது எனக் கேள்வி

தூய்மைப் பணியாளர்கள்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட போது காவல்துறை அத்துமீறி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஏன் அமைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள்
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவர்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ஏன் கைவிடக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், add pp muniyaparaj , அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட இயலாது எனவும் வழக்குகளை கைவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும், கைதான வழக்கறிஞர்கள் விடுவிக்கப்பட்டதால் இந்த ஆட்கொணர்வு மனு காலாவதி ஆகிவிட்டது எனவும் தெரிவித்தார்.

போராட்டம் சம்பந்தமான இந்த வழக்கை ஏன் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் தானே போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த விவகாரத்தில் மறப்போம், மன்னிப்போம் என்ற நிலைப்பாட்டை அரசு எடுக்கலாமே என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசு துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. 2020ம் ஆண்டிலிருந்து தனியார் மயம் இருக்கும் நிலையில் உள் நோக்கத்துடன் போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டதில் இருந்து விடுவிக்கப்படும் வரை பெண் வழக்கறிஞர்கள் ரத்தம் வரும் வரை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவ அறிக்கையும் மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் சங்கரசுப்பு , கிருஷ்ணகுமார. தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இரு பெண் வழக்கறிஞர்களை அழைத்து நீதிபதிகள் பேசினர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஏன் ஒரு நபர் ஆணையம் அமைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை இடைக்கால உத்தரவுக்காக தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version