Msrj bench பிறந்து 28 நாள் ஆன குழந்தை இறப்பில் சந்தேகம் இருந்ததால் 48 நாட்களுக்கு பிறகு அதன் பிணத்தை தோண்டிஎடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிறந்து 28 நாள் ஆன குழந்தை இறப்பில் சந்தேகம் இருந்ததால் 48 நாட்களுக்கு பிறகு அதன் பிணத்தை தோண்டிஎடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் பண்ருட்டியை சேர்ந்த மருத்துவ கல்லுாரியில் எம்பிபிஎஸ் படித்து வந்த மாணவி வினோலியா தனது முதல் குழந்தை காணாமல் போய்விட்டது அதை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி ரமேஸ், லட்சுமி நாராயணன் ஆகியோர் விசாரித்து குழந்தையை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு அதே நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது குழந்தையை வளர்த்து வரும் பெற்றோர்கள் கோர்ட்டில் ஆஜராகி, பண்ருட்டி மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும் அனாதையாக விட்டு சென்றதால் மருத்துவமனை எங்களிடம் ஒப்படைத்ததால் நாங்கள் வளர்த்து வருகிறோம் என்று கூறினர். இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் அரசு வக்கீல் ராஜ்திலக்கிற்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் இதில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதை அரசு வக்கீல் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் மனுதாரரும் மருத்துவ கல்லுாரி படித்து வந்தார். படிப்பை பாதியில் விட்டு விட்டு ஒரு வியாபாரியுடன் தனியாக லிவிங்க டு கெதராக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. அதை கொண்டு மருத்துவமனையில் விட வியாபாரியிடம் ஒப்படைத்துள்ளார். எனவே குழந்தை மரு்ததுவமனையில் விட்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அடுத்த குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 28 நாட்களுக்கு பிறகு அதை ஜுூலை மாதம் 4ம் தேதி இரவு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று பண்ருட்டி மருத்துவ மனைக்கு மனுதாரர் எடுத்து சென்றுள்ளார் . அங்கு ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று டாக்டர்கள் கூறியதை கேட்டதும் மனுதாரர் வலுக்கட்டாயமாக குழந்தையை அடுத்து சென்று அந்த ஊரை சேர்ந்த சிலர் முன்னிலையில் புதைத்துள்ளார். இதை ஐகோர்ட்டில் மறைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதை பார்த்த நீதிபதிகள், மனுதாரரை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது மனுதாரர் பொய்களை கூறுவதால் அவரது வக்கீல் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார். சமரச மையத்திலும் பொய் கூறியதால் சமரசம் ஏற்படவில்லை. இதனால் மனுதாரர் தரப்பில் ஆஜராகி வாதாட வக்கீல் சந்திர சேகரை கோர்ட் இலவச சட்ட உதவி மூலம் நியமித்தது. இந்த மனுதாரர் கோர்ட்டில் உண்மையை மறைத்துள்ளதால் புதைத்து 48 நாட்கள் பிறகு புதைத்தை இடத்தில் குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து அதை அறிக்கையாக வருகிற 28ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்என்று பண்ருட்டி மருத்துவமனை டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏன் குழந்தை இறந்ததில் சந்தேகம் உள்ளதால் இதை விசாரித்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
26 நாள் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
குழந்தை பால் சுரப்பதால் இறந்திருக்கலாம், ஆனால் தாய் அதை மறைக்க முயன்றதாக சந்தேகித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
வெளியிடப்பட்டது – ஆகஸ்ட் 20, 2025 06:37 pm IST – சென்னை
முகமது இம்ரானுல்லா எஸ்.
26 நாள் குழந்தையின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, அதன் உடலை தோண்டி எடுக்குமாறு கடலூர் காவல் கண்காணிப்பாளருக்கு (SP) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தையின் தாய் குழந்தையின் பிறப்பையே நீதிமன்றத்தின் முன் மறைத்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்து, உடலை தோண்டி எடுத்து, பின்னர் அரசு மருத்துவமனைக்கு தடயவியல் நோயியல் பகுப்பாய்வுக்காக அனுப்புமாறு எஸ்.பி.க்கு உத்தரவிட்டது.