Judge barathidasan ordered notice to ec in two electuon case —-கிருஷ்ணகிரி மற்றும் வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் வழக்குகளுக்கு பதிலளிக்க அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் வழக்குகளுக்கு பதிலளிக்க அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல, வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகத்திலும், ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

இரு தேர்தல் வழக்குகளையும் விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கு தொடர்பாக செப்டம்பர் 6 ம் தேதிக்குள் பதிலளிக்க இரு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டார்.

You may also like...

CALL ME
Exit mobile version