Judge Anath venkadesh /women advt video case / for petner senior adv abudu kumar /for central gov adv Kumara Guru

இராமாயணத்தில் இராவணின் தலை ஒவ்வொரு முறை வெட்டபடும் போது மீண்டும் மீண்டும் முளைப்பது போல, அந்தரங்க வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாவதாக சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பெண் வக்கீல் வீடியோ விவகாரம்

அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது மேலும் 13 இணையதளங்களில் பரவி உள்ளதாகவும், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள ஆயிரத்து 400 சட்ட விரோத இணையதளங்களை முடக்கியது போல, இந்த சட்ட விரோத இணைய தளங்களையும் முடக்க வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து நீதிபதி, இராமாயணத்தில் இராவணின் தலை ஒவ்வொரு முறை வெட்டப்படும் போது மீண்டும் மீண்டும் முளைப்பது போல, மீண்டும் மீண்டும் அந்தரங்க வீடியோக்களும் இணையத்தில் வெளியாவதாக கவலை தெரிவித்தார்.

மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சட்ட விரோத இணைய தளங்களை முடக்கியது போல, இந்த இணைய தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய ஏதுவாக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version