Idol case mhc grsj bench

சிலை பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சம்பந்தபபட்ட கோவில்களுக்கு அனுப்ப உத்தவிடக் கோரிய வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள புராதன சிலைகளை பாதுகாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிலைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு ஆகம விதிகளின்படி பூசைகள் நடத்தப்படவில்லை என்பதால், அவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அனுப்ப உத்தவிடக் கோரி கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சிவபக்தரான டி.சுரேஷ்பாபு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சிலைகள் பாதுகாப்பு மையங்களில் நடராஜர் உள்ளிட்ட பல்வேறு சிலைகள், கிட்டங்கியில் அடுக்கிவைக்கப்படும் பொருட்களை போல அடுக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும், எப்போது கோவிலுக்கு அனுப்பப்படும் என்பது தெரிவியவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு பூசைகள், நெய்வேத்தியங்கள் செய்யாதது ஆகம விதிகளுக்கு முரணானது எனவும், இந்த பஞ்சலோகம் மற்றும் செம்பு போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்ட சிலைகளை வழிபட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்புடன் சிலைகளை பாதுகாப்பாக கோவில்களில் வைப்பதை விடுத்து, உலோகங்களை போல சிலை பாதுகாப்பு மையங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சலோகம் மற்றும் செம்பு போன்ற உலோகங்களால் ஆன இந்த சிலைகளை குவித்து வைத்திருப்பதால், வேதியியல் மாற்றம் ஏற்பட்டு சிலைகள் சேதமடைய வாய்ப்புள்ளது என்பதால், சிலைகளை மீண்டும் சம்பந்தபட்ட கோவில்களுக்கு அனுப்பிவைக்க உத்தரவிட வேண்டும் அல்லது சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள உலோக்க திருமேணிகளுக்கு அர்ச்சகர் மூலமாக தினசரி பூசைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளை (மே 29) தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version