https://x.com/i/status/2038434166795358486 [30/03, 07:22] sekarreporter1: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று (மார்ச் 30) அன்று நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 1 லட்சத்து 540 வழக்கறிஞர்கள் வாக்களிக்கவுள்ளனர். முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள தமிழக வழக்கறிஞர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க அங்கும் வாக்குப்பெட்டி பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

[30/03, 07:22] sekarreporter1: https://x.com/i/status/2038434166795358486
[30/03, 07:22] sekarreporter1: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று (மார்ச் 30) அன்று நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 1 லட்சத்து 540 வழக்கறிஞர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் பார் கவுன்சில் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான கே.என்.பாஷா மற்றும் பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் உயர் மட்டக்குழு உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் இ. ஓம்பிரகாஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு பார் கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது நடைபெறவுள்ளது.
இதற்காக தமிழகத்தில் 166 வாக்குச்சாவடி மையங்களும், புதுச்சேரியில் 2 மையங்களும் என மொத்தம் 168 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வருகை தரும் தகுதியான வழக்கறிஞர்களுக்கு வலது கை ஆள்காட்டி விரவில் அழியா மை வைக்கப்படும்.
முதன்முறையாக க்யூ-ஆர் கோடு முறையில் வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன், ஜனநாயக முறைப்படி நடத்தப்படவுள்ளது. இந்த க்யூ ஆர் கோடுள்ள ஸ்லிப்பை ஸ்கேன் செய்தால் வாக்காளரின் பெயர், பதிவு எண், எந்த வழக்கறிஞர் சங்கம், வாக்களிக்க வேண்டிய பூத் என அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்று இருக்கும்.
அதன்மூலம் வாக்காளர்களின் விவரங்கள் நொடிப்பொழுதில் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு எளிமையான முறையில் நடைபெற அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் அல்லது தேர்தல் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் தேர்தல் மார்ச் 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
மொத்தம் குறைந்தது 5 பெண்கள் உள்பட 23 பார் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் 1, 2, 3 என முன்னுரிமை அடிப்படையில் 23 பேருக்கு வாக்களிக்கலாம்.
இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 3 பேரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 5 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். அதையடுத்து தற்போது 143 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலை நடத்த உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தர் தலைமையிலான உயர் மட்டக்குழு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தேர்தலுக்கான பணிகளை செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்திட போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள தமிழக வழக்கறிஞர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க அங்கும் வாக்குப்பெட்டி பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேர் வாக்களிக்கவுள்ளதால் கலையரங்கம் மற்றும் எஸ்பிளனேடு நுழைவாயில் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவர்கள் விரைவாக தங்களது வாக்கினை பதிவு செய்யும் வகையில் 56 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 8 ஆயிரத்து 591 பேர் என வாக்களிக்கவுள்ளனர்.
முதன்முறையாக இந்த தேர்தலை பார்வையிட்டு கண்காணி்க்க தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பெட்டிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 3-ம் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சுமார் ஒன்று முதல் ஒன்றரை மாதங்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 23 உறுப்பினர்கள் தவிர்த்து எஞ்சிய 2 உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும். வாக்குக்கு பணம், பொருள் கொடுப்பது ஆதாரப்பூர்வமாக கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பிரசாரம் மார்ச் 28-ம் தேதி மாலை 5 மணி வரையுடன் முடிவடைகிறது. அதன்பிறகு எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளோம் என தேர்தல் அதிகாரிகளான கே.என்.பாஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
.பேட்டி 1: கே.என்.பாஷா ( தேர்தல் அதிகாரி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி )
பேட்டி 2: இ. ஓம் பிரகாஷ் ( தேர்தல் அதிகாரி , உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version