http://youtube.com/post/UgkxzvKrQ6-5LDZGMm2nVJTLUTG_e1W0IAo-?si=xXpfa8TfGZVim3P3 [10/02, 21:27] Sekarreporter: முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர்யா ரால் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்” என்று அழைக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தை ஆண்ட

[10/02, 20:46] Sekarreporter: http://youtube.com/post/UgkxzvKrQ6-5LDZGMm2nVJTLUTG_e1W0IAo-?si=xXpfa8TfGZVim3P3
[10/02, 21:27] Sekarreporter: முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர்யா ரால் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்” என்று அழைக்கப்பட்டு, பின்னர் தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவால்” அதிமுகவின் சட்ட மூளை கே.எஸ்.” என்று அடைமொழி தரப்பட்டு, ” “இவர் இல்லாவிடில் ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாது” என்று அன்று புகழ்பெற்ற இந்தியா டுடே ” பத்திரிக்கையால் எழுதப்பட்டு, இன்று இந்திய சட்ட உலக சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்கரவர்த்தியாக உலா வரும் கீர்த்தி மிகுந்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், மற்றும் தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் திரு. கே. சுப்ரமணியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வணங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் . பூரிப்பு
அடைகிறோம் , புலங்காகிதம் கொள்கிறோம். ஏனெனில் நீங்கள் சட்ட உலகில் செய்த செயற்கரிய சாதனைகளை புரிந்ததற்கா தான். தோன்றி புகழோடு தோன்றுக ” என்ற வள்ளுவனின் வாய்மொழியை உணர்த்தும் விதத்தில், தாங்கள் அன்று வறண்ட தமிழகத்திற்காக நீதிமன்றத்தில் வாதாடி 205 டி எம் சி காவிரி நீர் பெற்றுத் தந்ததன் மூலம் தமிழக விவசாயிகளின் உள்ளங்களை மழை மேகமாக்கி, இதயத்தையு குளிர் வாடை காண செய்தீர்கள். நதிநீர் பிரச்சினையில் அன்றைய கேரளா அரசு தங்களுக்கு கோடிகளை கொட்டி கொடுக்க முன் வந்த போதும் அற நெறியில் நின்று கேரளா அரசின் சார்பாக வாதாட மறுத்தீர்கள். பொன்மனச் செம்மலின் சமரசமற்ற, சட்டப் போர்வாளாக திகழ்ந்து ஆஜரான அனைத்து வழக்குகளிலும் அவருக்குவெற்றியைத் தேடித் வந்தீர்கள்.!”ரே” கமிஷனில் ஆஜராகி கலைக்கப்பட விருந்த எம்ஜிஆர் ஆட்சியை காப்பாற்றினீர்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார் போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, இந்திய துணைக் க ன்டத்தில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை ஆன ,கல்வி வேலை வாய்ப்புகளில் 69 சதவீதம் யாரும் எக்காலத்திலும் அசைக்க முடியாத வகையில்,அரசியல் சட்டப் பாதுகாப்போடு இட ஒதுக்கீடு பெற்றுத்தந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றியதின் மூலம் அவர்கள் நெஞ்சத்தில் நீங்கள் என்றென்றும் அணையா விளக்காக காட்சியளிப்பீர்கள். புகழ்பெற்ற வழக்குகளில் உங்களுடன் நாங்களும் ஜூனியர் வழக்கறிஞர்களாக ஆஜர் ஆகியதன் மூலம், பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல நாங்களும் நாடறியப்பட்டோம். நடமாடும் தெய்வமாக திகழ்ந்த காஞ்சி மகா பெரியவரின் ஆசியோடும் தாங்கள் பல்லாண்டுவாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுகிறேன். இப்படிக்கு என்றென்றும் உங்களுடன். ஐ. நிஷார். எம்.எ.,பி.எல்., வழக்கறிஞர் உயர்நீதிமன்றம். சென்னை.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version