http://youtube.com/post/UgkxkMZzpvWMuRFwVcJF8zOs5xTLmUW2RTQt?si=5A7tfc_Pob6vmscq [22/04, 12:25] sekarreporter1: அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[22/04, 12:25] sekarreporter1: http://youtube.com/post/UgkxkMZzpvWMuRFwVcJF8zOs5xTLmUW2RTQt?si=5A7tfc_Pob6vmscq
[22/04, 12:25] sekarreporter1: அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடந்த போராட்டத்தில், கடந்த 2023ம் ஆண்டு பங்கேற்று பேசிய தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 1956ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவு கருத்துகளைப் பேசிய அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிக கடுமையாக சாடினார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததார். அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என, கூறியிருந்தார்.

இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார்.

இந்த வழக்கில் அண்ணாமலையை ஆஜராக சம்மன் அனுப்பியும் உத்தரவிட்டிருந்தது.

தன் மீதான இந்த வழக்கினை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை தரப்பில் வக்கீல் ஆர.சி. பால்கனகராஜ் ஆஜராகி, தனி நபர் புகாரை விசாரணைக்கு ஏற்கும் முன், மனுதாரர் தரப்புக்கு நோட்டீஸ் கொடுத்து, உரிய விளக்கத்தை, நீதிமன்றம் பெறவில்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், நேரில் ஆஜராகுவதில் இருந்தும் விலக்களித்தும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன்.15ம் தேதி தள்ளிவைத்தார். மேலும், இந்த மனுவுக்கு புகார்தாரர் பியூஸ் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version