Chief justice of mhc order in water body police station case

செம்மஞ்சேரியில் நீர் நிலையில் அமைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்தை, அதே பகுதியில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்மஞ்சேரியில் நீர் நிலையில் காவல் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 61 ஹெக்டேர் நிலம், மேய்க்கால் தாங்கல் சாலை என்பது 1987 ஆம் ஆண்டு மேய்க்கால் சாலை என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த உத்தரவின் அடிப்படையில் அந்த நிலம் வகைமாற்றம் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆவணங்களின் அடிப்படையில், அந்த நிலம் நீர்நிலை என்பதால், செம்மஞ்சேரி காவல் நிலையத்தை அதே பகுதியில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version