13 வழக்குகளை ரத்து

மூன்றாண்டு வரை தண்டனை விதிக்கும் வகையிலான விசாரணை நீதிமன்றத்தில் வாரண்ட மற்றும் பிடி வாரண்ட நிலுவையில் இருந்த 13 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, விரைந்து முடிக்க, உச்சநீதிமன்ற குழு, அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு, தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த சென்னை, அரியலூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சம்மந்தப்பட்ட மாவட்ட நீதிபதியிடம் இருந்து அறிக்கை பெறபட்டது. அதில் பல ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட குற்ற வழக்குகளில் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் கண்டு பிடிக்கமுடியாமல் தலைமறைவாக உள்ள நபர்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக வாரண்ட் மற்றும் பிடி வாரண்ட பிறப்பிக்கபட்டு நிலுவையில் உள்ளதை மாவட்ட நீதிபதிகள் அங்களின் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இது போன்ற வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட வழக்குகளை புகார் அளித்தவர் மரணம் அடைந்திருப்பது அல்லது எதிர் தரப்பினர் மரணம் அடைந்திருப்பது, குற்றஞ்சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக காணாமல் போனது இது போன்ற உள்ள வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல்நிலைய காவல்துறையிடம் மற்றும் புகார் அளித்தவர் புகார் அளித்தவரின் குடும்பத்தினரிடம் ஆகியோரிடம் காணொளி காட்சி மூலமாக விசாரணை செய்தார்.

பின்னர் 15 வழக்குகளில் 13 வழக்குகள் மேற்கொண்டு விசாரிப்பதில் எந்தவிதமான பலனும் இல்லை என்பதால் 13 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மீதாம் இருந்த 2 வழக்குகளை நாளை மறு தினத்திற்கு தள்ளிவைத்தார். அன்று மேலும் இது போன்ற சில வழக்குகளை பட்டியலிட பதிவித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version