/02, 14:01] Mukesh Reporter: சவர்மா சாப்பிட்டு பாதிப்பு – ரூ. 35000 இழப்பீடு பீப் சவர்மா, பீப் ஷீக் சாப்பிட்டு வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 35000 வழங்க வடசென்னை நுகர்வோர் ஆணையம் உத்தரவு

[26/02, 14:01] Mukesh Reporter: சவர்மா சாப்பிட்டு பாதிப்பு – ரூ. 35000 இழப்பீடு

பீப் சவர்மா, பீப் ஷீக் சாப்பிட்டு வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 35000 வழங்க வடசென்னை நுகர்வோர் ஆணையம் உத்தரவு

திருவல்லிக்கேணி ஹோட்டல் பிலால் பிரியாணி என்ற கடையில் மாட்டுக்கறி சவர்மா, மாட்டுக்கறி கேபாப் பால், மாட்டுக்கறி சீக் ஆகியவற்றை ரூ. 400-கக்கு சாப்பிட்ட மண்ணடி கே.எம்.அகமது முஸ்தபா சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிப்பு

பில் தொகை, மருத்துவ செலவு, மன உளைச்சலுக்கான இழப்பீடு, வழக்கு செலவுத் தொகை ஆகியவற்றுக்காக ரூ. 2,32,400 வழங்க உத்தரவிடக் கோரி அகமது முஸ்தபா வழக்கு

ரூ. 30000 இழப்பீடு மற்றும் ரூ. 5000 வழக்கு செலவு தொகை என ரூ. 35000-ஐ 2 மாதங்களில் வழங்க ஆணையம் உத்தரவு
[26/02, 14:08] Mukesh Reporter: தரமற்ற பீப் சவர்மா, பீப் ஷீக் சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்துக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மண்ணடியைச் சேர்ந்த கே.எம்.அகமது முஸ்தபா திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டல் பிலால் பிரியாணி என்ற கடையில் மாட்டுக்கறி சவர்மா, மாட்டுக்கறி கேபாப் பால், மாட்டுக்கறி சீக் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு, 400 ரூபாய் செலுத்தியுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சௌகார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து உயிர் பிழைத்துள்ளார்.

தரமற்ற உணவு வழங்கி, இன்னலுக்கு உள்ளாக்கிய ஹோட்டல் பிலால் பிரியாணிக்கு எதிராக வடசென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்து, பில் தொகை ரூ. 400 , மருத்துவ செலவு ரூ. 22000 , மன உளைச்சலுக்கான இழப்பீடு ரூ. 2 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10000 ஆகியவை சேர்த்து, ரூ. 2,32,400-ஐ தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நுகர்வோர் ஆணைய தலைவர் டி. கோபிநாத், உறுப்பினர்கள், கவிதா கண்ணன் மற்றும் டி. ஆர். சிவக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். முகமது ஷபித் ஆஜராகி தரமற்ற உணவால் பாதிக்கப்பட்டது குறித்து விவரித்தார். பின்னர் நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், இழப்பீடு மற்றும் வழக்கு செலவு தொகை ஆகியவற்றுக்காக ரூ. 35000-ஐ 2 மாதங்களில், அகமது முஸ்தபாவுக்கு ஹோட்டல் பிலால் பிரியாணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version