வாழ்த்துகின்றேன்* ! *வணங்குகின்றேன்* !! *போற்றிப்* *புகழ்கின்றேன்* !!! இரண்டாயிரம் ஆண்டுகள் மேற்பட்ட வர்ணாசிரம சதியால் அடிமைப்பட்டு கிடந்த இம்மண்ணின் மைந்தர்களான

*வாழ்த்துகின்றேன்* ! *வணங்குகின்றேன்* !!
*போற்றிப்*
*புகழ்கின்றேன்* !!!
🙏🙏🙏
இரண்டாயிரம் ஆண்டுகள் மேற்பட்ட வர்ணாசிரம சதியால் அடிமைப்பட்டு கிடந்த இம்மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது வெறும் இலவச சலுகை அல்ல இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமை என்ற கொள்கையை பின்பற்றி மண்டல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று உரிமை மறுக்கப்பட்ட மக்களின் உயர்விற்காக 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் கொண்டுவந்த
தமிழினத் தலைவர்
கலைஞரின் வழியில்
நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு
தமிழக முதல்வர்
தளபதி
அவர்கள் சமூக நீதியை நிலைநாட்ட வழங்கப்படும் இட ஒதுக்கீடு சாதிய பாகுபாடு எனும் ஆழ்கடலில் தத்தளிக்கும் மக்களை கரை சேர்க்கும் தோணியாக, ஆண்டான்- அடிமை எனும் வேறுபாட்டால் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் மக்களை மேடு ஏற்றும் ஏணியாக இருக்க வேண்டும் அதற்காக எத்தகைய சவால் வரினும் எதிர்த்து நிற்போம்!
என்ற சூளுரைத்த தலைவரின் ஆலோசனையை ஏற்று
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கவேண்டிய இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசால் மறுக்கப்பட்டு வந்த நிலையில், திமுகவின் சார்பில் சமூக நீதியின் குரலாய் பாராளுமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்காடி இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிமையை பெற்றுத்தந்து இந்திய ஒன்றியத்தில் உள்ள தலைவர்களில் சமூகநீதி காப்பதில் முதன்மையானவராக திகழும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். *மாண்புமிகு* *முதல்வர்* அவர்களின் மன சாட்சியாய் பாராளுமன்ற விவாதத்திலும் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை வாதத்திலும் தனது சிறந்த சட்ட அறிவால் தன்மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கிய வாய்ப்பினை உரியமுறையில் பயன்படுத்தி இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி வெற்றியை பெற்றுத் தந்துள்ள *மாண்புமிகு* _மூத்த_ _வழக்கறிஞர்_ *பி.வில்சன்* *எம்.பி* அவர்களின் ஆகச்சிறந்த பணிக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நீதிமன்றம் பாராளுமன்றம் இரண்டும் உங்களின் இரு கண்கள் என்பதை நான் அறிவேன். இரு மன்றத்திலும் தமிழக முதல்வரின் மன சாட்சியாய் வாதம் விவாதம் என்று சாதனை புரியும் உங்களின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகிறேன்… உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய நீங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள தனிநபர் மசோதா நிறைவேற மனதார வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயப்பிரகாஷ் ,
வழக்கறிஞர்,
சென்னை உயர்நீதிமன்றம்
💐💐💐💐💐

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version