லஞ்ச ஒழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட VAO-வை மீண்டும் பணியில் அமர்த்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு* *மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவு*
*லஞ்ச ஒழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட VAO-வை மீண்டும் பணியில் அமர்த்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
*மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவு*
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வந்த மனுதாரர், பட்டா வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து இதுவரை பணியிடை நீக்கத்தில் வைத்திருந்ததால், இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் உதயகுமாருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, லஞ்ச ஒழிப்பு விசாரணை ஏழு மாதங்களுக்கு மேலாகியும் , இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், மேலும் துறை ரீதியான குற்றப்பத்திரிகை (Charge Memo) கூட வழங்கப்படவில்லை என்றும், எனவே மனுதாரரை ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை என்றும் வாதிட்டார். மேலும், நீண்டகால பணியிடை நீக்கம் சட்டத்திற்கு முரணானது என்றும், மனுதாரரை முக்கியத்துவமற்ற (Non-Sensitive) பணியிடத்தில் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வலியுறுத்தினார். அரசுத் தரப்பில் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
*தீர்ப்பு*
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, லஞ்ச ஒழிப்பு விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி நீண்டகால பணியிடை நீக்கத்தை தொடர்வது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மனுதாரரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, அவரை வேறு ஏதேனும் நான் சென்ஸிட்டிவ் (Non-Sensitive) பணியிடத்தில் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.