மசோதா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமை

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புது தில்லி, செப். 10: மசோதாக் கள் மீது முடிவெடுக்க குடியர கும் சுத் தலைவருக்கும், ஆளுநருக் டதை மாநில அரசுகள் வரவேற்ப தாக உச்சநீதிமன்றத்தில் புதன்கி காலக்கெடு நிர்ணயிக்கப்பட் ழமை தமிழக அரசு வாதிட்டது.

5 a

றும் குடியரசுத் தலைவர் 3 மாதங் மசோதாக்கள் மீது ஆளுநர் மற் களுக்குள் முடிவெடுக்க வேண் டும் என உச்சநீதிமன்ற இரு நீதி பதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் தெளிவுரை கோரும் வகை யில் 14 கேள்விகளை உச்சநீதிமன் றத் தலைமை நீதிபதிக்கு குடியர சுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தேதி கடி தம் அனுப்பி கேட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தை வழக்காக விசாரணைக்கு உச்சநீதிமன்ற அர சியல் சாசன அமர்வு அனுமதித் தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமை

யிலான இந்த அமர்வில் நீதிப திகள் சூர்யகாந்த் விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமர்வு அனுப்பிய அனைத்து நோட்டீஸின்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங் கள், மத்திய அரசு ஆகியவை அவற்றின் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத் தில் தாக்கல் செய்தன. அவை தொடர்பான விவாதம் ஒன்பதா வது நாளாக புதன் கிழமை நடை

பெற்றது. அப்போது தமிழக

அரசு சார்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் மூத்த வழக் குரைஞருமான பி. வில்சன் முன் வைத்த வாதம்: மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவ ருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில நிர்ணயிக்கப்பட்டதை அரசுகள் வரவேற்கின்றன. ஆளு நர் மசோதாக்களை நீண்ட காலத்துக்கு நிறுத்தி வைக்க முடியாது. ஏனென்றால், ஆளுநர் அமைச்சரவை முடிவுகளுக்கு உள்பட்டு

செயல்படுபவர். மசோதாக்கள் மீது முடிவெடுக்கப்படா மல் இருப்பதை நீதி மன்றம் அமைதி யாகப் பார்த்துக்

கொண்டிருக்க முடியாது. மூன்று மாதங்களில் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றஉ சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல் படுத்துவதில் குடியரசுத் தலைவ ருக்கும். ஆளுநருக்கும் எந்தச் சிக் கலும் இரு ம் இருக்க முடியாது. உச்சந்தி மன்றம் வழங்கிய தீர்ப்பு மாநிலங் களுக்கு உதவிகரமாக உள்ளது என பி. வில்சன் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், தனிப்பட்ட தீர்ப்பு குறித்து நாங் கள் இப்போது எந்த விசாரணை யும் மேற்கொள்ளவில்லை. குடிய ரசுத் தலைவர் விளக்கம் கேட்டது தொடர்பாக மட்டுமே விசாரித்து வருகிறோம்’ என்றார்.

பின்னர், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா ஆஜராகி, மசோதாக்கள் காலவரம்பின்றி நிறுத்தி வைக்கப்

படுவதை நாங்கள் நியாயப்படுத் தவில்லை. எனினும், மசோதாக் களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதிக உள்ளது. கடந்த 55 ஆண்டுகளில் நாடு முழுவதும் வைக்கப்பட்டன என்று குறிப் 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி பிட்டார்.

1970-ஆம் ஆண்டிலிருந்து 2025 வரை நாடு முழுவதும் 17,000 மசோதாக்களில் 20 மசோதாக்கள் மட்டுமே பல்வேறு மாநில ஆளு நர்களால் நிறுத்தி வைக்கப்பட் டன. 90 சதவீத மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும், சில மசோதாக் களுக்கு மூன்று மாதங்களிலும் வேறு சிலமசோதாக்களுக்கு ஆறு மாதங்களில்கூட ஒப்புதல் வழங் சுப்பட்டுள்ளது என்றும் துஷார் மேக் மேத்தா குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக் கின் வாதங்கள் வியாழக்கிழமை யும் தொடரும் என்று குறிப்பிட்டு விசாரணையை தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version