பராசக்தி மனுதாரர் வருண் ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்
பராசக்தி
மனுதாரர் வருண் ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி
மனுதாரரின் குடும்பம் திமுக குடும்பம் என்பது மட்டுமல்லாமல், அவரது அப்பா இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அண்ணாமலை பல்கலைக்கழக துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த அவரது நண்பர் ராஜேந்திரனின் நினைவாகவே தன் மகனுக்கு ராஜேந்திரன் என பெயர் சூட்டியதாக தெரிவித்தார்.
மனுதாரர் ஏற்கனவே 2 படங்கள் இணை இயக்குனராக பணியாற்றிபோது, பெண் சிங்கம் படப்பிடிப்பு தளத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களிடம் வாழ்த்து பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். செம்மொழி என்ற கதையை அவரிடம் சொன்னபோது, அந்த பாராட்டை தெரிவித்துடன், உடல்நிலை காரணமாக தன்னால் படம் எடுக்க முடியாததால் ராஜேந்திரனையே எடுக்கச் சொன்னதாகவும், இதற்கு பெண் சிங்கம் படத்தின் இயக்குநர் சாட்சியமாக இருப்பதாகவும் வழக்கறிஞர் புருஷோத்தமன் வாதிட்டார்.
கடந்த ஆண்டு திருவொற்றியூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய கட்சி பிரமுகர், இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி ராஜேந்திரன் நிச்சயம் படம் எடுப்பார், விரைவில் திரைக்கு வரும் என்று பேசிய வீடியோ இணையதளங்களில் இருப்பதாக கூறி அதன் இணைப்பை தாக்கல் செய்தார்.
தமிழரசி தங்கபாண்டியன் தேர்தலில் போட்டியிட்டபோது, ராஜேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கலைஞர் நூற்றாண்டு விழாவில் பாராட்டப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.
2010ல் பதிவுசெய்த கதையை மேலும் மெருருகேற்றும் நோக்கில், இறந்த ராஜேந்திரனின் சகோதரியை பார்த்து பேசியதாகவும், 2023ஆம் ஆண்டிலேயே ஆய்வாளர் *** டாக்டர் ராமசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் வழக்கறிஞர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
இரு கதைகளுக்கும் நிறைய சம்பந்தம் இருப்பதாகவும், அதனாலேயே படக்குழு கதையை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியதுடன், வேற வேறான கதை என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.
15.1.2025 எழுத்தாளர் சங்கத்தில் புகார்
தான் சந்தித்த ராமசாமியை 26.06.2025 அன்றுதான் படக்குழுவினர் சந்தித்தாகவும், அதற்கு முன்னர் அவரது மகனை தொடர்புகொண்டு பேரம் பேசியதாகவும், ஏற்கனவே கதை தயாராக இருப்பதாக கூறிய நிலையில், கான்சொப்ட் ரைட்டராக
புகழேந்தி மணிமாறன் என்பவர் 2025ல் தான் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பராசக்தி கதை ஒரு புறமிருக்க, இறுதிச்சுற்று படத்தின் கதை தன்னுடைய கணவரின் கதை என அவரது மனைவி அளித்த பேட்டி இணையதளத்தில் தற்போதுவரை கிடைப்பதாகவும் கூறி, அதையும் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்தார்.