நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவம் படித்தவர்கள், தாங்கள் படிக்கும் போது பெற்ற பயிற்சி

அலோபதி முறைப்படி மருத்துவம் பார்த்ததாக ஹோமியோபதி மருத்துவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் உள்ள தனியார் ஹோமியோபதி கிளினிக்கில் திடீர் சோதனை நடத்திய வட்டார மருத்துவ அதிகாரி, அங்கு அலோபதி முறையில் மருத்துவம் பார்ப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி செந்தில்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவம் படித்தவர்கள், தாங்கள் படிக்கும் போது பெற்ற பயிற்சி அடிப்படையில் அலோபதி மருத்துவமும் பார்க்கலாம் எனவும் முழுக்க முழுக்க அலோபதி மருத்துவம் செய்யக் கூடாது எனவும் 2010ம் ஆண்டும் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கை நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அந்த சுற்றறிக்கையில், இந்திய மருத்துவமுறை படித்த மருத்துவர்கள், நவீன மருத்துவதையும் பார்ப்பதில் காவல் துறையினர் தலையிடக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மருத்துவர் செந்தில்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version