தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி  ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…judge barathidasan .

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி 
ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின  தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவரது வேட்புமனு ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும்,  தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை எனவும் அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், தேர்தல் ஆணையம் மற்றும் உதயநிதி ஆகியோர் 2  வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்…

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version