திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி

அய்யா,
வணக்கம்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராவை அகற்றக் கோரி ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது ரிட்.எண்.32677/2025 இன்று
(02-09-2025) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள் முன்பு வந்தது. அந்த மனுவில் கோவில் கர்ப்பகிரகம் மற்றும் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி பொருத்துவது ஆகமத்திற்கு உகந்தது அல்ல என வாதிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு.அருண் நடராஜன் அவர்கள், அர்த்த மண்டபத்தில் சிறிய மரகத லிங்கம் உள்ளது அதனை பாதுகாப்பதற்கே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று வாதிட்டார். மேலும் சிசிடிவி கேமரா கர்ப்பகிரகத்திற்கு நேரே அமைக்கப்படவில்லை என்றும் வாதிட்டார். திருக்கோவில் சொத்தை பாதுகாப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என தெரிவித்த நீதிபதி அவர்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version