சிறப்பு டிஜிபி-யால் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.-யை தடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப்பெறக் கோரி ஆண் எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

L

சிறப்பு டிஜிபி-யால் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.-யை தடுத்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப்பெறக் கோரி ஆண் எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி-யாக இருந்தவர் (ராஜேஷ் தாஸ்) பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சிறப்பு டிஜிபியும் (ராஜேஷ் தாஸ்) மற்றும் பெண் எஸ்.பி. சென்னைக்கு வரவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. (டி. கண்ணன்) ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட உட்புகார் விசாரணைக் குழு எனப்படும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். பாலியல் தொல்லை வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென தமிழக அரசிடம் கொடுத்த மனு மீது மடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. வழக்கு தொடர்ந்திருந்திருந்தார்.

அதேசமயம், உட்புகார் விசாரணை குழு விதிப்படி அமைக்கவில்லை என்பதால் அதை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபியும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சஸ்பெண்ட் சிறப்பு டிஜிபி மீதான புகாரை விசாரிக்கும் குழு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெறக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. அளித்த மனுவை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து 6 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

குழு அமைத்ததை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

 

 

 

 

 

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version