சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர்,தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர்
ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு இந்த மனுவை அனுப்பியுள்ளார்

அதில், நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர் சங்கம் மற்றும் அதன் தலைவராக இருந்து மறைந்த குரு ஆகியோரை குறிக்கும் வகையில் காட்சிகளும், கதாப்பாத்திரங்களும் அமைத்து அவதூறு பரப்பி உள்ளதாக அந்த நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய பெயர்களுடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் அந்தோனிசாமி பெயரை குருமூர்த்தி என மாற்றியதுடன், பின்னணியில் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அமைத்ததாக நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். படக்குழுவினரின் இந்த செயல் அறியாமல் நடந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

என்னதான் படம் தாழ்த்தப்பட்ட கணவன் மனைவி அனுபவித்த சித்ரவதைகளை காட்டும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும்,ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை கெடுக்கும் நோக்கில் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் எந்தவிதமான விருதுக்கோ பாராட்டுக்கோ தகுதியானது இல்லை எனவும் ஜெய் பீம் படத்தை தேசிய விருது உட்பட எந்த வித விருதுக்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ஏற்கனவே படக்குழுவிற்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version