கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட
 ஏ. பி சாஹியின் பதவிகாலம் நேற்று (டிசம்பர் 31) முடிவடைந்தது.
இவர் ஓய்வுபெறுவதை கருத்தில் கொண்டு  கொல்கத்தா உயர்ம்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் இந்த பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டது. அதன்படி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி….
கடந்த 1961 ம் ஆண்டு நவம்பர் 2ல் பிறந்த
சஞ்ஜிப் பானர்ஜி,
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பின் 1990ல்  வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்
கொல்கத்தா, டெல்லி, ஜார்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தொழில் செய்து சிவில், நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்
2006 ம் ஆண்டு ஜூன் 22 ம் தேதி  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில்  நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார்
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version