கும்பகோணம் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட டெண்டர் கோரி இருப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதில் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் K. N நேரு மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ திரு. க.அன்பழகன் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அது

கும்பகோணம் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்ட டெண்டர் கோரி இருப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதில் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் K. N நேரு மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ திரு. க.அன்பழகன் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அது சம்பந்தமாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக்கோரி கும்பகோணம்
வழக்கறிஞர் T. G மாணிக்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு 18. 12. 2025 சென்னை உயர் நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதி அரசர் நிர்மல் குமார் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை முதல் கட்ட விசாரணை நடத்தி இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
அந்த வழக்கை விசாரித்த நீதி அரசர் நிர்மல் குமார் அவர்கள் வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு எம்எல்ஏ எம்பிக்களை விசாரிக்க கூடிய சிறப்பு அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டார். எனவே இந்த வழக்கு எம்எல்ஏ எம்பிக்களை விசாரிக்க கூடிய உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் வெகு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version