கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தமிழக பள்ளிகளில் பயின்று வரும் 25 சதவீத ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை மத்திய அரசு 4 ஆண்டுகள் விடுவிக்காமல், கடந்த இரண்டு 2 மாதத்திற்கு முன்பு, 2 ஆண்டுகளுக்கு மட்டுமே விடுவித்தது. அந்த தொகையானது 2021 -2022, மற்றும் 2022 -2023 கல்வி ஆண்டிற்கு உரியது. ஏழை எளிய மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில், தாயுள்ளம் கொண்ட நம் தமிழக முதல்வர் அவர்கள், உரிய காலத்தில் மேற்கண்ட இரண்டு கல்வி ஆண்டிற்கான நிதியை மாநில நிதியில் இருந்து வழங்கி விட்டார்கள்.

PRIVATE SCHOOLS S ASSOCI

TAMILNADU

PRIVATE SCHOOLS ASSOCIATION

Head office: No.5, MP Avenue, Majestic Colony, Saligramam, chennai.600028

tpsa24@gmail.com

கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தமிழக பள்ளிகளில் பயின்று வரும் 25 சதவீத ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை மத்திய அரசு 4 ஆண்டுகள் விடுவிக்காமல், கடந்த இரண்டு 2 மாதத்திற்கு முன்பு, 2 ஆண்டுகளுக்கு மட்டுமே விடுவித்தது. அந்த தொகையானது 2021 -2022, மற்றும் 2022 -2023 கல்வி ஆண்டிற்கு உரியது. ஏழை எளிய மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில், தாயுள்ளம் கொண்ட நம் தமிழக முதல்வர் அவர்கள், உரிய காலத்தில் மேற்கண்ட இரண்டு கல்வி ஆண்டிற்கான நிதியை மாநில நிதியில் இருந்து வழங்கி விட்டார்கள்.

இந்நிலையில், 2023-2024, 2024 2025 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு, மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காத நிலையிலும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு, மாநில அரசின் நிதியில் இருந்து, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கியதைப் போலவே, இன்றைய தினம் 2 கல்வி ஆண்டிற்கான மொத்த RTE நிலுவைத் தொகையையும், மாண்புமிகு நமது தமிழக முதல்வர் அவர்கள் விடுவித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் சார்பாகவும், RTE ல் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெருவித்துக் கொள்கிறோம். வெகு விரைவில், தனியார் பள்ளிகளின் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெருவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

B.T. A (Founder/President)

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்(TPSA)

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version