ஐஏஎஸ் அதிகாரிக்கு பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவை எதிர்ததுஅரசு தாக்கல் செய்த அப்பீல் வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
கிருஸ்ணகிரி நுகர்வோர் கோர்ட் ஐஏஎஸ் அதிகாரிக்கு பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவை எதிர்ததுஅரசு தாக்கல் செய்த அப்பீல் வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
கிருஸ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 2 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்தது. இதை சட்டப்படி பயன்படுத்தாததால் அதை நில உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த தொடர்ந்து 2 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் விலைக்கு வாங்கி அதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தடையில்லா சான்றிதல் தர கோரி கிருஸ்ணகிரி நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நுகர்வோர் கோர்ட் விசாரித்து தடையில்லா சான்றிதழ் தர வீட்டு வசரி வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதை வீட்டு வசதிவாரிய நிர்வாக இயக்குனர் அமுல்படுத்தவில்லை. இதனால் வீ்ட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர் ஐஏஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகும் அவர் நுகர்வோர்ட் ஆஜராகாததால் ஐஏஎஸ் அதிகாரிக்கு நுகர்வோர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் ஐகோர்ட் டில் அப்பீல் செய்தது. இந்த வழக்கில் வக்கீல் கெல்வின் ஜோன்ஸ் ஆஜராகி அரசு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார், இந்த வழக்கை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா விசாரித்து தள்ளுபடி செய்து கிருஸ்ணகிரி மாவட்ட நுகர்வோர்ட் கோர்ட் உத்தரவை எதிர்த்து மாநில நுகர்வோர் கோர்ட்டில் தான் அப்பீல் செய்ய வேண்டும். இதற்கான கால தாமத்தை அனுமதித்து மாநில நுகர் வோர்ட்டில் அப்பீல் செய்ய உத்தரவிட்டார். ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது தவறானது. இதை ஏற்க முடியாது என்று தீர்ப்பு கூறினார்.