எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக காவல்துறை விசாரித்து வரும் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டது தொடர்பாக தமிழக காவல்துறை விசாரித்து வரும் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், இருவரும் உயர் நீதிமன்றத்தை நாடி, நிபந்தனை முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசப்பட்டது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை சி பி ஐ க்கு மாற்ற உத்தரவிடக்கோரி திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெ.பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகார் மீது மட்டுமல்லாமல், குதிரை பேரத்திற்கு ஆளான பிற எம்எல்ஏக்கள் தொடர்பான விவகாரங்களையும் விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நாளை விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version