உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. கே. ராஜன் என்பவர் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளார். அதில் கூறிய சாராம்சம் என்னவென்றால், தமிழகத்தில் உள்ள ஏரிகளை நம்பி விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் தமிழகத்தில்
விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் கிராமத்தைச் சார்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. கே. ராஜன் என்பவர் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளார். அதில் கூறிய சாராம்சம் என்னவென்றால், தமிழகத்தில் உள்ள ஏரிகளை நம்பி விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலத்தில் பயிரிட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஏரிகளின் நிலைமை படுமோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டது. ஆங்காங்கே சட்டத்துக்குப் புறம்பாக ஏரி மண் வெட்டி எடுப்பதில் மிக ஆழப்படுத்தியும் மற்றும் ஏரிகளில் பல குட்டைகள் அமைத்துத் ஏரி மண் திருடப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் மறுபடியும் அரசு சமம் செய்து தடையின்றி நீர், விவசாய நிலங்களுக்குச் செல்வதற்கு சீர்திருத்தம் செய்து தர வேண்டும் என்றும். இது போன்ற குண்டும் குழியமாக ஏரிகளை நாசம் செய்த சமூக விரோதிகளுக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாகக் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள ஏரிகள் படுமோசம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.