அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமித்த கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி. அப்பீலில் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், செந்தில்குமார் அமர்வு பரபரப்பான தீர்ப்பினை பிறப்பித்துள்ளனர். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், குமாரதேவன் சிவா ஆருத்ரா ஆகியோர் ஆஜரானார்கள்.
அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமித்த கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
கோவை மாநகராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அவசர கதியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதற்கான விண்ணப்ப அறிவிப்பு இரண்டு மாலை செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது சம்பந்தமான அறிவிப்பு கோவை பதிப்புகளில் வெளியிடப்படவில்லை. ஆனால் வெளியிடப்பட்டதாக ஒரு கடிதத்தை கோவை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் காட்டியது. அதை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஒரே நாளில் 440 நபர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை நடத்தி, அன்றே சான்றிதழ்களை சரிபார்த்து, பணி நியமன ஆணையும் ஒரே நாளில் வழங்கப்பட்டு அதே நாளில் பணிப்பதிவேடும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், மேற்படி பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்பொழுது பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதற்கு முன்பு அப்பொழுது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் தொகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள், அதிமுக கட்சிக்காரர்கள் பணி நியமனம் செய்வதற்காக கண்துடைப்புக்காக ஒரு கமிட்டி ஒன்றை போட்டு எந்த தேர்வும் நடத்தாமல், நேர்முகத் தேர்வு நடத்தி அதற்குரிய மதிப்பெண்களும் அளிக்கப்படாமல் அவசர கதியில் மார்ச் மாதம் 8-ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டார்கள். இதில் இடஒதுக்கீட்டு முறையும் கோவை மாநகராட்சியின் பணி நியமன விதிகளும் முறையாக பின்பற்றப்படவில்லை. ஏற்கனவே பதவி உயர்வுக்காக காத்திருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு பதவி உயர்வு வழங்காமல் பணி நியமனம் நடைபெற்றது.
மேற்படி பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஈஸ்வரி உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
மேற்படி ரிட் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, முறைகேடுகள் நடைபெற்றதாக முகாந்திரம் இருந்தாலும் மனுதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளாததால் பணி நியமனத்தை கேள்வி கேட்க முடியாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதனை எதிர்த்து ரிட் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி அப்பீலில் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், செந்தில்குமார் அமர்வு பரபரப்பான தீர்ப்பினை பிறப்பித்துள்ளனர். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், குமாரதேவன் சிவா ஆருத்ரா ஆகியோர் ஆஜரானார்கள்.