இறால் பண்ணைகள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது
முத்துப்பேட்டை தாலுகாவில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், தில்லை விளாகம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் செயல் படும் சட்ட விரோத இரால் பண்ணைகளை அகற்றக் கோரி தில்லை விளாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யோகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் சட்ட விரோத இரால் பண்ணைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று நீதிபதி பரதசக்கர வர்த்தி கடந்த 28/4/2025 அன்று தீர்ப்பளித்தார்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த தீர்ப்பினை செயல் படுத்தாத திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச் சந்திரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேற்படி மனுதாரர் யோகநாதன் தொடர்ந்தார்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இன்று விசாரணைக்கு வந்த போது
47 சட்ட விரோத இறால் பண்ணைகள் கண்டறியப் பட்டதாக மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
மேற்படி தகவல் தவறானது எனவும் 300 க்கும் மேற்பட்ட இரால் பண்ணைகள் செயல் படுவதாக யோகநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.காசிநாத பாரதி கூறி
பதில் மனு தாக்கல் செய்து வாதிட்டார்.
இதனை கேட்ட நீதிபதி பரதசக்கர வர்த்தி ,
சட்டவிரோத இறால் பண்ணைகள் செயல்படுகிறதா அல்லது முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர்
பிரவீன் ராஜ் என்பவரை வழக்கறிஞர் ஆணையாளராக நியமனம் செய்து முத்துப்பேட்டை, தில்லை விளாகம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்திர விட்டார்
இந்த
வழக்கினை அடுத்த மாதம் 22ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
[25/08, 17:36] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1959950502466031811?t=buMmU-xUteLECLZMDeGlGg&s=08
[25/08, 17:36] Sekarreporter: முத்துப்பேட்டை தாலுகாவில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் அகற்றிய. கோரிய வழக்கு.
முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் யோகநாதன்
தொடர்ந்த வழக்கு
சட்டவிரோத இறால் பண்ணைகள் குறித்து
ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம் – சென்னை உயர் நீதி மன்றம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, தில்லை விளாகம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் செயல் படும் சட்ட விரோத இரால் பண்ணைகளை அகற்றக் கோரி தில்லை விளாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யோகநாதன் வழக்கு
சட்ட விரோத இரால் பண்ணைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் நீதிபதி பரதசக்கர வர்த்தி கடந்த ஏப்ரலில் தீர்ப்பளித்தார்
இந்த தீர்ப்பினை செயல் படுத்தாத திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச் சந்திரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
47 சட்ட விரோத இறால் பண்ணைகள் கண்டறியப் பட்டதாக மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல்
300 க்கும் மேற்பட்ட இரால் பண்ணைகள் செயல் படுவதாக யோகநாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.காசிநாத பாரதி
பதில் மனு தாக்கல்
சட்டவிரோத இறால் பண்ணைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர்
பிரவீன் ராஜ் என்பவரை வழக்கறிஞர் ஆணையாளராக நியமனம் – நீதிபதி