அதிமுக கட்சியின் அமைப்பு தேர்தல்:* *இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக அறிக்கை!* புது டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று மாலை அதிமுக சார்பில் அறிக்கை ஒன்று வழங்கப்பட்டது.

*அதிமுக கட்சியின் அமைப்பு தேர்தல்:*
*இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அதிமுக அறிக்கை!*

புது டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்று மாலை அதிமுக சார்பில் அறிக்கை ஒன்று வழங்கப்பட்டது.
அந்த அறிக்கையில் “சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் உட்கட்சி தேர்தல் விதிமுறைகளில் சில புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய விதிமுறைகளின்படியே அதிமுகவின் அமைப்பு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது நடைபெற்று முடிந்த முதற்கட்ட தேர்தலிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ்பன்னீர் செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த புதிய விதிமுறைகளின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கட்சியின் தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை மற்றும் எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன் ரவீந்திரநாத்,எஸ்ஆர் பாலசுப்ரமணியம் சந்திரசேகர் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுசில்சந்திராவை இன்று மாலை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் இந்த அறிக்கையை அளித்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version