அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழ்க்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழ்க்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உறுப்பினர் என கூறி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த வழக்கில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், பதவி நீக்கம் செய்யவும், நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் இடைக்கால கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பிரியா, இடைக்கால மனு குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். ஒற்றை தலைமை தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version