பல் மருத்துவ சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தாக அளித்த புகார் நிரூபிக்கப்பட்டவில்லை எனக்கூறி இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[17/12, 08:16] Sekarreporter: “Opposite Party
Counsel for Complainant: M/s. T.Karthikeyan
Counsel for Opposite Party: M/s. S. Haja Mohideen Gisthi

On perusal of records and after having heard the oral arguments of Counsel for Complainant and the Counsel for the Opposite Party, we deliver the following:”

Case against Docter dismissed. DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION, CHENNAI (NORTH). Present: PRESIDENT: Thiru. D. GOPINATH, M.L., M.HR., MEMBER-I: TMT. KAVITHA KANNAN, M.E., MEMBER-II: THIRU.V.RAMAMURTHY, B.A., B.L., PGDLA.,:


[17/12, 08:16] Sekarreporter: பல் மருத்துவ சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தாக அளித்த புகார் நிரூபிக்கப்பட்டவில்லை எனக்கூறி இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் சரவணன், இவர் கடந்த 2021 ம் ஆண்டு கொரானாவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருந்தார்.

நாளாடைவில் அவருக்கு தலைவலி மற்றும் மேல் தாடை பற்களில் ஆடுவது, வலி என பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காது மூக்கு தொண்டை மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ராஜன் பல் மருத்துவ மையத்திற்கு சென்றால் சரி செய்து விடலாம் என பரிந்துரைத்துள்ளார்.

அதன் அடிப்படையில்
ரோசன் ராயன் பல் மருத்துவ மையத்தில் சரவணன் சென்று சிகிச்சை பெற்றார்.

அப்போது அவருக்கு கருப்பு புஞ்சை நோய் மூக்கு நாசி பகுதியில் இருப்பதும், அது மேல் தாடை எலும்புகளை பாதிப்படைய செய்திருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதன் பின் கருப்பு புஞ்சையை அகற்றும் போது மேல் தாடை எலுப்புகளை அகற்றி செயற்கை தாடையை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.

இதனால் தன்னால் உணவு உண்ண முடியாமல் மிகவும் மிகவும் சிரமப்படுவதாகவும், தனக்கு முறையான அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும் தன்னிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கூடுதலாக மருத்துவ கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கூறி சரவணன் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் தனக்கு உரிய இழப்பீடு வழங்க பல் மருத்துவ மனைக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

அந்த மனு நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன்,ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, ரோசன் ராஜன் பல் மருத்துவமனை தரப்பில், வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி ஆஜராகி, புகார்தாரருக்கு மருத்துவ விதிகளின் படியே முறையான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்குரிய மருத்துவ கட்டணங்களே வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கூடுதலாக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம், சேவை குறைப்பாடு மற்றும் அலட்சியம் இருப்பதற்காக எந்த ஆதரங்களையும் புகார் தாரர் தாக்கல் செய்யவில்லை என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, இழப்பீடு கோரிய புகார் தாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version