Senthil balaji case discharge filed

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி கடந்த 2011 ம் ஆண்டு முதல் – 2015 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

இவ்வாறு கிடைத்த பணத்தின் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக கூறி செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பின்னர் இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றி செல்வன், அருண் ரவீந்திரா டேனியல், ஆல்பட் தினகரன், ஜெயராஜ் குமார், பழனி,லோகநாதன்,பிரபு,அனுராத ரமேஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு ஜூன் 14 ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் கடந்த 2024 ம் ஆண்டு செப்டம்பர் 26 ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதன் முறையாக வழக்கில் நேரில் ஆஜராகவில்லை, அதே போல் அவரின் சகோதரர் அசோக் குமாரும் ஆஜராகவில்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது செந்தில் பாலாஜியின் சகோதர் அசோக் குமார், கார்த்திகேயன், அனுராத ரமேஷ் ஆகிய 3 பேர் தரப்பில் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை பெற்ற நீதிபதி, இதன் மீதான விசாரணைக்காக வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version