Rti case sc

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சிறப்பு விடுப்பு மனு இன்று விசாரணை விவரம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த கோரிய எனது வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன்

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் தேசிய கல்விக் கொள்கையை காரணம் காட்டி கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான பணத்தை நிறுத்தி வைக்க கூடாது எனவும் கட்டாய கல்வி உரிமை சட்டம் என்பது தனித்தன்மையானது என்றும் அதனால் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான நிதியை மத்திய அரசு மாநில அரசுக்கு விடுவிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கும் அதேபோல நிதி வரும் வரை காத்திருக்காமல் கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டது

ஆனால் தமிழ்நாடு அரசு மாணவர் சேர்க்கை நடத்தவில்லை மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி தருவதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை

இதனால் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தேன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்ற அன்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது

இந்த வழக்கில் எனது சார்பாக கேவியட் மனு பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது மாண்புமிகு நீதிபதி விக்ரம் நாத் மற்றும் மாண்புமிகு நீதிபதி சந்திப் மேத்தா ஆகியோர் அமர்வு இதனை விசாரித்தது

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை கேட்டு இருந்தனர் ஆனால் தடை கொடுக்கவில்லை

மாநில அரசு மட்டும் நிதி அளிக்க வேண்டும் என தீர்ப்பில் சொல்லி இருப்பதாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் கூறினார் ஆனால் தீர்ப்பில் மத்திய அரசின் பங்கு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாண்புமிகு நீதிபதிகள் தெரிவித்தனர்

அதன் பின்பு மத்திய அரசு மற்றும் எங்களுக்கும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை இல்லை என்பதால் கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் எனது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள வேண்டும்

ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும்

வே ஈசுவரன்
தலைவர்
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version