Posco case punsihment sessions court

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 58 வயதான ரவி கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி அளித்துள்ள தீர்ப்பில், ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 7 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அரபாதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version