Navj வைணவ பிரிவு என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர அது தனிப்பட்ட ஒரு ஜாதி இல்லையென்று தெரிவித்து பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை

இ காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோயில் பிரசாத கடை விற்பனை உரிமம் சம்பந்தமாக வழக்கு எண்.30409/2025 சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் டி வி ஆர் அவர்கள் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் பிரசாத விற்பனை கடை காலம் காலமாக வைணவ பிராமண சமுதாயத்தினர் நடத்தி வந்தனர் என்றும் அவர்கள் தொடர்ந்து நடத்துவதுதான் சரி என்றும் ஆகையால் பிரசாத விற்பனை உரிமையை வேறு எவருக்கும் மாற்றக்கூடாது என்றும் வைணவ பிராமண சமுதாயத்தினரே நடத்த வேண்டும் என்றும் வாதிட்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, தனிப்பட்ட ஒரு பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாத விற்பனை அனுமதிக்க முடியாது என்றும் தற்போது திருக்கோயில் பழக்கவழக்கத்திற்கும் ஆகம விதிகளுக்கும் உட்பட்டு இதற்கு முன், பல வைணவ திருக்கோயில்களில் பிரசாத தயாரிப்பில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவரையே திருக்கோயிலில் நேரடியாக பிரசாத கடை நடத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே போன்ற ஒரு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தனிப்பட்ட ஒரு பிரிவினருக்கு உரிமை வழங்கப்பட மாட்டாது என்ற வழக்கினை மேற்கோள் காட்டப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதியரசர் வைணவ பிரிவு என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர அது தனிப்பட்ட ஒரு ஜாதி இல்லையென்று தெரிவித்து பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version