Madras high court news

[11/27, 11:04] Sekarreporter 1: வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்…
சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கியது  செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.மேலும்,
3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் ,சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வேதனையை தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சீன அதிபர் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து
மனு அளிக்கப்பட்டது. இந்த மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
[11/27, 12:12] Sekarreporter 1: தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நிரந்தர அங்கீகாரம் வழங்க வகை செய்யும் 1994ம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், நவம்பர் 12ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப் பிரிவுகளிலும், மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கான விதிகளிலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் என்பது நிரந்தரமானது என்றும், சட்ட விதிகளின் படி அதை திரும்பப் பெற முடியுமே தவிர, காலக்கெடு நிர்ணயித்து கட்டுப்பாடு விதிப்பது சட்டவிரோதமானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரத்தை அதிகாரிகள் செயல்படுத்த முடியாது என்றும், தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிரந்தரமாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்குவது நிர்வாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாணைக்கு தடைவிதிக்கவேண்டும் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், தொடக்க கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[11/27, 13:38] Sekarreporter 1: தத்து கொடுக்கப்பட்ட சிறுமியை திரும்ப கேட்டு பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்பு தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சத்யா, சிவக்குமார் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்யா என்பவர் ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் சரண்யா என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

சத்யா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், தனது மூன்றரை மாத பெண் குழந்தையை, சிவகுமார் கடந்த 2012ம் ஆண்டு தத்து கொடுத்தார்.

இதற்கிடையில் சத்யாவின் கணவர் ரமேஷ் புற்று நோயால் கடந்த 2019ம் ஆண்டு இறந்த நிலையில், தத்து கொடுத்த குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று பெற்ற தாய் சரண்யா, அம்மா பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போன்று சத்யாவும் புகார் அளித்தார்.

இந்த பிரச்னை காரணமாக சிறுமி காப்பகத்தில் காவல்துறையினர் சேர்ந்தனர்.

இந்த நிலையில் குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொண்ர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு, சிறுமியிடம் விசாரித்த போது, இருவரும் வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வளர்ப்பு தாயிடமே குழந்தை வளர்ந்து தற்போது சிறுமி ஆகிவிட்டதால் வளர்ப்புத்தாய் வளர்க்க வேண்டும் என்று கூறி, சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பெற்ற தாயை வாரம் ஒருமுறை சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...

CALL ME
Exit mobile version