Madras high court 10 orders nov 12

[11/12, 15:12] Sekarreporter 1: தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில அரசு மறுக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் எஸ் கே சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் சம்பந்தமாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.புகாரில் மாணவர்கள் மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார் .இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததற்காக தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் தாக்கியதாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலாருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன்,கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணை வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,
பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மனித உரிமை ஆணையத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும் ஆனால் முழு அமர்வு உத்தரவுப்படி பரிந்துரை ஏற்றுக்கொள்ள முடியாது என கூற முடியாது என்று தெரிவித்துள்ளனர் ..
பரிந்துரை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், மனுதாரரின் புகார் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுத்து அது குறித்தான அறிக்கையை வரும் 15ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

புகார் குறித்து உரிய நடவடிக்கையை தலைமையில் செயலாளர்தான் முடிவு செய்து எடுக்க வேண்டும் என்றும் அவருடைய நடவடிக்கை எடுப்பது குறித்த பதிலை வரும் 15 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
[11/12, 15:12] Sekarreporter 1: சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கில் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[11/12, 15:12] Sekarreporter 1: பழங்குடியினர் சாதிச் சான்று சரி பார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட மாநில அளவிலான சரிபார்ப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியின் தீவிரம் காட்டும்படி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதாகுமாரி, எல்.ஐ.சி. நிறுவனத்தில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தார். அவருக்கு திருத்தணி தாசில்தாரர் அளித்த பழங்குடியினர் சாதிச் சான்றை சரிபார்ப்பதற்காக, எல்.ஐ.சி. நிறுவனம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தது.

இந்த சான்றிதழை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், லலிதாகுமாரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல எனக் கூறி அவரது சாதிச் சான்றிதழை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்தபுயர் நீதிமன்றம், சாதிச் சான்றிதழை சரி பார்க்கும்படி மாநில அளவிலான குழுவுக்கு கடந்த 1998ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, லலிதா குமாரியின் சான்றிதழை சரிபார்த்து, சாதிச் சான்றிதழை உறுதி செய்து 2020ம் ஆண்டு மாநில அளவிலான குழு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு உரிய பதவி உயர்வுகளும், பணப்பலன்களும் வழங்கக் கோரி லலிதா குமாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, லலிதாகுமாரியின் சாதிச்சான்று சரி தான் என உத்தரவிட்டுள்ளதால், அவருக்குரிய அனைத்து பணி மற்றும் பணப்பலன்களை வழங்கும்படி எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், சாதிச் சான்றை சரி பார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட மாநில அளவிலான சாதிச்சான்று சரிபார்ப்புக் குழுவின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சான்றிதழ் சரிபார்க்கும் பணியின் தீவிரம், அதிகாரம் மற்றும் பொறுப்பு குறித்து, இப்பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே தக்க தருணம் என ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
[11/12, 15:12] Sekarreporter 1: தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில அரசு மறுக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் எஸ் கே சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் சம்பந்தமாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.புகாரில் மாணவர்கள் மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார் .இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததற்காக தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் தாக்கியதாகவும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். புகாரை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச்செயலாருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன்,கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணை வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் ,
பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மனித உரிமை ஆணையத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும் ஆனால் முழு அமர்வு உத்தரவுப்படி பரிந்துரை ஏற்றுக்கொள்ள முடியாது என கூற முடியாது என்று தெரிவித்துள்ளனர் ..
பரிந்துரை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், மனுதாரரின் புகார் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுத்து அது குறித்தான அறிக்கையை வரும் 15ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

புகார் குறித்து உரிய நடவடிக்கையை தலைமையில் செயலாளர்தான் முடிவு செய்து எடுக்க வேண்டும் என்றும் அவருடைய நடவடிக்கை எடுப்பது குறித்த பதிலை வரும் 15 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
[11/12, 15:12] Sekarreporter 1: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கே, ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு சப்ளை செய்யும் உள் ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 14 ஆயிரத்து 614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின் தேசிய வேளான் விற்பனை கூட்டமைப்புடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த கேந்திரிய பந்தர் என்ற நிறுவனத்துக்கு தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்பு உள் ஒப்பந்தம் வழங்கியது.

இதை எதிர்த்தும், மத்திய அரசு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தேசிய வேளாண் பொருள் விற்பனை கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தர் நிறுவனங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சப்ளை செய்த பருப்பை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள கிட்டங்கிகளில் உள்ள பருப்பின் மாதிரிகளை சேகரித்து அரசு ஆய்வகங்களில் தரப் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.
[11/12, 15:13] Sekarreporter 1: சட்டவிரோதமாக கோவில் பெயரை சொல்லி யூடியூப் மூலம் வசூலித்த தொகையை மீண்டும் கோயிலுக்கு செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், இளைய பாரதம் யுடியூப் சேனலின் உரிமையாளருனான கார்த்திக் கோபிநாத் மீது கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது கோவிலின் செயல் அலுவலர் மற்றும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஆகியோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், பதிவான வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், கோவில் திருப்பணிகளுக்காக மிலாப் செயலி மூலம் வசூலித்த 30 லட்சத்து 77 ஆயிரத்து 801 ரூபாய் 88 காசுகளை கோவில் திருப்பணிக்கான ஸ்தபதி கணக்கில் செலுத்த அனுமதிக்கவும், அதற்காக தன்னை நன்கொடையாளர் என அங்கீகரிக்கவும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணை வரும் 16 ஆம் தேதி ஒத்திவைப்பு
[11/12, 15:46] Sekarreporter 1: கொரோனா பேரலைகளின்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்களை, அரசின் நிரந்தர உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களாக நியமிக்கும் கோரிக்கையை 2 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்கள் வெங்கட்ராமன், அருவி உள்ளிட்ட 11 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், கொரோனா தொற்று காலத்தின் மூன்று அலைகளிலும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த மருத்துவர்களாக பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.

நிரந்தர பணி நியமனம் கோரி அரசுக்கு பலமுறை அளிக்கப்பட்ட மனு மீது எந்த பதிலும் தெரிவிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கசிவன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கொரோனா நோய் தொற்றின்போது பணியாற்றிய மருத்துவர்களை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களாக நியமனம் செய்ய முன்னுரிமையை தமிழக அரசு வழங்கவில்லை என தெரிவித்தார். 100 நாட்கள் மருத்துவர்களாக பணியாற்றினால் அவர்களை முழுநேர மருத்துவர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, மனுதாரர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டதாகவும், 2018ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்ய முடியாது என்றும் வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கொரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்ததை கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களாக பணி நியமனம் செய்யக் கோரி 2 வாரத்திற்குள் புதிய மனு அளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
[11/12, 16:17] Sekarreporter 1: பிறப்பு, இறப்பு பதிவேட்டில் எழுத்து பிழையுடன் பதிவு செய்யப்பட்டதை மாற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மகேஷ்வரி என்று பதிவாகியுள்ள தனது பெயரை மாற்றி பதியக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் மனைவி மல்லேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சரியான பெயரை பதிவு செய்யும்படி கடந்த 2020 செப்டம்பரில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவுத்துறை அதிகாரிகள் அமல்படுத்தாததால் அவர்கள் மீது மல்லேஸ்வரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
[11/12, 16:31] Sekarreporter 1: எழும்பூர் ஐந்தாவது நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார்
[11/12, 16:31] Sekarreporter 1: சவுக்கு சங்கரை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..
[11/12, 16:33] Sekarreporter 1: எழுத்து பிழையுடன் பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழை திருத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மகேஷ்வரி என்று பதிவாகியுள்ள தனது பெயரை மாற்றி பதியக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசத்தின் மனைவி மல்லேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சரியான பெயரை பதிவு செய்யும்படி கடந்த 2020 செப்டம்பரில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவுத்துறை அதிகாரிகள் அமல்படுத்தாததால் அவர்கள் மீது மல்லேஸ்வரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மண்டல சுகாதார அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
[11/12, 16:35] Sekarreporter 1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பொன்னையா நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் வரும் ஸ்ரீபெரும்புதூர், நெம்மேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலம் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த நிலத்திற்கு உரிமையாளர்களாக இல்லாத நபர்கள் அரசு அதிகாரிகளின் துணையுடன் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்திற்கான இழப்பீடு முயற்சிப்பதாகவும் அவர்களுக்கு இழப்பீடு வழங்க கூடாது என கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரம் ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தார்.

மனு மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை தேசிய வங்கியில் டெபாசிட் செய்து வைக்க உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி உரிமையாளர்களாக இல்லாதவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தண்டபானி, காஞ்சிபுரம் மாவட்ட அப்போதைய ஆட்சியர் பொன்னையா மற்றும் அப்போதைய சிறப்பு தாசில்தார் மீனா ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்

You may also like...

CALL ME
Exit mobile version