K balu: இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 27 சதவிகத இட ஒதுக்கீடு வழக்கில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் ஆஜராகி இந்த ஆண்டு ஓபிசி மாணவர்களுக்கு27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக எந்த தடையும் விதிக்கவில்லை இச்சூழலில் தற்போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் உச்சநீதிமன்றத்தில்
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி ராஜகோபால் சலோனி குமாரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 7ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்கு விசாரணையை அதற்கு பின்பு ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிட்டார்
அதனை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
வழக்கு இந்த திசையில் தான் செல்லும் என்பதை அறிந்து அன்புமணி ராமதாஸ் இதற்கு முன்பாகவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை பின்தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளும் சலோனி குமாரி வழக்கில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
[6/22, 11:24] Sekarreporter 1: 🍁🍁🍁