Judges vaithiyanathan and nakkiren judge. திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் தலைவர் இந்துமதி பாண்டியன் பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் தலைவர் இந்துமதி பாண்டியன் பதவியேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒத்துக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமாரும், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

அவர்கள் தங்கள் மனுவில்,
மலை கிராமமான நாயக்கனேரியில் 9 வார்டுகளில் 3440 வாக்காளர்கள் உள்ளதாகவும், கிராமத்தின் மக்கள் தொகையில் 66 சதவீதம் பழங்குடியினரும், மீதமுள்ள 34 சதவீதம் பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்

பட்டியலினத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில், தற்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

சம்மந்தப்பட்ட பஞ்சாயத்தில்
பட்டியலினத்தவரோ, பழங்குடியினரோ, பெண்களோ ஒட்டுமொத்த மக்கள்தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அதிகமாக இருந்தால் தான் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற விதி உள்ள நிலையில், அது பின்பற்றப்படவில்லை எனவும் இதுதொடர்பாக செப்டம்பர் 8ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்

நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலினத்தவரே இல்லாத நிலையில்
கடைசி நேரத்தில் பெரியங்குப்பம் பஞ்சாயத்து வாக்காளரான இந்துமதி பாண்டியனின் நாயக்கனேரி பஞ்சாயத்தில் இணைத்ததாக குற்றம்சாட்டி தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரியிருந்தனர்

வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், பின்னர் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் , வேட்புமனு தாக்கல் செய்த இரு பட்டியலின பெண்களில், பியூலா தேவதாஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு, இந்துமதி பாண்டியனின் வேட்பு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை நாயக்கனேரி ஊராட்சியில் போட்டியின்றி தேர்வான பட்டியலின பெண் இந்துமதி பாண்டியன் தலைவராக பதவியேற்க தடை விதித்ததோடு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்

சம்மந்தப்பட்ட வேட்பாளர் பியூலா தேவதாஸை வழக்கில் எதிர்மனுதாரராக இணைக்கவும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

You may also like...

CALL ME
Exit mobile version