Judge velmurugan state pp Ginna argued for petner வக்கீல் இளம்பாரதி மற்றும் other case advt pp Hasan mugamath Ginna சுரேஷ் Police sp பாலியல் வழக்கு ஐகோர்ட் உத்தரவு

[10/20, 12:53] Sekarreporter: பெண் எஸ்.பி.க்கு கூடுதல் டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ் பி. டி.கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்ததில் வழக்கு தொடர்ந்திருந்தார் .

அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, கண்ணன் தரப்பில் கூடுதல் டிஜிபி-யாக இருந்த ராஜேஷ்தாஸ் அறிவுறுத்தலின்படியே தான் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி வேல்முருகன் குறுக்கிட்டு பெண் அதிகாரிகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டுமெனவும், உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்..

உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து வழக்கை வாபஸ்பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கீழமை நீதிமன்ற விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
[10/20, 12:53] Sekarreporter: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறப்பு டிஜிபி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் ராஜேஷ் தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சாட்சிகள் பலர், புகாரளித்த பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு டிஜிபி தரப்பில் விசாகா கமிட்டி விசாரணை முடிந்த 10 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதன் அறிக்கையை வழங்க வேண்டும் என்றும், ஆனால் இதுவரை தனக்கு வழக்கப்படவில்லை என்றும், குழுவை மாற்றியமைக்கும் கோரிக்கையும் பரிசீலிக்கபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வழக்கு குறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.
[10/20, 12:53] Sekarreporter: பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, 127 சாட்சிகளை விசாரித்து, 73 ஆவணங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் குற்ற சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிபிசிஐடி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க அதிகாரமுள்ளதாக விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

You may also like...

CALL ME
Exit mobile version